சாஸ்திரங்கள் கூறும் ஒன்பது வகையான பெண்கள் இவர்கள் தான் எந்த வகை பொண்கள் அதில் சிறந்தவங்க‌ நல்லவங்க தெரியுமா?

0

சாஸ்திரங்கள் கூறும் ஒன்பது வகையான பெண்கள் இவர்கள் தான் எந்த வகை பொண்ணுங்க நல்லவங்க தெரியுமா?

பண்டைய கால வேதங்கள் மற்றும் புராணங்களின் உதவியுடன் நாம் தர்மம், அஸ்திரம், யுகம், பிறப்பு, இறப்பு, ஜோதிடம், அறிவியல் என பலவற்றை பற்றி தெரிந்து கொண்டுள்ளோம். அந்த கால அறிஞர்களும், முனிவர்களும் வருங்கால தலைமுறைகளுக்காக இவற்றை உருவாக்கினர். சாஸ்திரங்கள் என்பது அவர்களின் தொகுக்கப்பட்ட அறிவுதான் தவிர வேறொன்றும் இல்லை.

சாஸ்திரங்கள் ஆண்களுக்கானது மட்டுமல்ல அது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இது மனிதர்களின் அனைத்து ஆளுமைகள் பற்றியும், அவர்களின் கடந்த-நிகழ்-எதிர்காலங்களை பற்றியும் பகுப்பாய்வு செய்யக்கூடியது. சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி பெண்களின் குணங்களை பொறுத்து மொத்தம் 9 வகைகளாக அவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அது என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவஸத்வஸ்திரி

இந்த வகை பெண்கள் பக்தி மிக்கவர்களாகவும், சுற்றுப்புறத்தால் கறைபடாதவர்களாகவும் இருப்பார்கள். இந்த பெண்கள் வலிமையானவர்கள் மற்றும் செல்வம் மற்றும் வணிகத்தின் மீது சிறந்த புத்திசாலித்தனம் கொண்டவர்கள். இனிமையாக பேசும் இரக்கமுள்ள இவர்கள் சமுதாயத்திற்கான தனது பங்களிப்பை எப்போதும் சிறப்பாக செய்வார்கள். இவரின் விருந்தோம்பல் குணம் அனைவராலும் பாராட்டப்படும்.

காந்தர்வஸத்வஸ்திரி

இவர்களின் பெயர்களுக்கு ஏற்ப இவர்கள் அன்பால் நிறைந்தவர்கள். இவர்கள் புத்திசாலித்தனம், தூய்மையான எண்ணம், வசீகரம், அழகான உடல் என அனைத்தும் கலந்த கலவையாக இருப்பார்கள். இவர்கள் கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆர்வத்தை உணர்த்தும் பெண்ணிய செயல்கள் இவர்களின் அழகை அதிகரிக்கும்.

யக்ஷஸத்வஸ்திரி

செல்வத்தையும், ஞானத்தையும் கட்டுப்படுத்தும் கடவுளின் அம்சம் கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் அழகான உருவத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். சாஸ்திரங்களின் படி இவர்கள் மனரீதியாக வலிமையானவர்களாக இருப்பார்கள் ஆனால் சமுதாயத்தின் மீது எந்த அக்கறையும் செலுத்த மாட்டார்கள். பேராசையும், அதிகாரத்தின் மீதான மோகமும் இவர்களுக்கு அதிகம் இருக்கும். இவர்களின் உடல் பாகங்கள் மற்ற பெண்களை விட கவர்ச்சியாக இருக்கும்.

முனுஷ்யஸத்வஸ்திரி

மனிதாபிமானத்தில் சிறந்து விளங்கும் இந்த பெண்கள் நட்புணர்வையும், விருந்தோம்பலையும் தனது ஆபரணமாக கொண்டவர்கள். கடின உழைப்பும், நேர்மையும் தனக்கான மரியாதையை பெற்றுத்தரும் என்று இவர்கள் நம்புவார்கள். மனதில் பட்டதை பேச இவர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள், ஆனால் கடவுள், சத்தியம் போன்றவற்றிற்கு அதிக பயப்படுவார்கள். இவர்களின் தோற்றம் சராசரியாக இருந்தாலும் இவர்களின் குணங்கள் அனைவரையும் ஈர்ப்பதாக இருக்கும்.

பிசாச்சஸத்வஸ்திரி

பெயரிலே குறிப்பிட்டுள்ளபடி இந்த வகை பெண்கள் தீயசக்திகளை போன்றவர்கள். இவர்கள் மற்ற பெண்களை விட குறைவான நல்ல குணங்களையே பெற்றிருப்பார்கள். இவர்கள் தூய்மை மற்றும் சுகாதாரத்தை விரும்புவார்கள் ஆனால் தடைசெய்யப்பட்ட காரியங்களை செய்வதில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். தன்னிடம் இருக்கும் எதை நினைத்தும் இவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். அன்பு, காதல், பணம், காமம் என எவ்வளவு கொடுத்தாலும் இவர்கள் மேலும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

நாகஸத்வஸ்திரி

இவர்கள் பெயருக்கு ஏற்றார்போல அனைத்தையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்கள் நேர்த்தியான உடலை கொண்டவர்களாக இருப்பார்கள் ஆனால் அதேசமயம் எளிதில் களைப்படைந்து விடுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சாகும்வரை அனைத்தையும், அனைவரையும் சந்தேகப்பட்டு கொண்டே இருப்பார்கள் அது அவர்களின் பிறவி குணம். இவர்கள் பார்ப்பதற்கு மற்றவர்களுக்கு அமைதியானவர்களாகவும், நல்லவர்களாகவும் தெரிவார்கள் ஆனால் நெருங்கியவர்களுக்கு மட்டுமே இவர்களின் உண்மையான குணம் தெரியும்.

காகஸத்வஸ்திரி

இவர்கள் மற்றவர்களிடம் தன்னை அன்பானவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் காட்டிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் காகங்களைப் போன்ற வினோதமான கண்களைக் கொண்டுள்ளனர், மற்றவர்களிடமிருந்து பயனடைவதை எப்போதும் விரும்புவார்கள். சராசரி உருவத்துடன் காட்சியளிக்கும் இவர்கள் எப்பொழுதும் குழப்ப மனநிலையுடன் இருப்பார்கள்.

வானரஸத்வஸ்திரி

பெயருக்கு ஏற்றாற்போல இந்த பெண்கள் எப்பொழுதும் தங்களை தாங்களே தீண்டிக்கொண்டே இருப்பார்கள். அதிகமாகவும், வேகமாகவும் பேசுவதை இவர்கள் விரும்புவார்கள். இவர்களின் ஆற்றலும், சுறுசுறுப்பான மனநிலையும் எந்த மோசமான சூழ்நிலையிலும் மாறாது. இவர்களின் மற்றவர்களின் குணங்களில் இருந்து தனக்கான குணத்தை உறிஞ்சிக்கொள்வார்கள்.

கரஸத்வஸ்திரி

இந்த பெண்களுக்கு மனிதநேயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை, சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது என்பதைப் பற்றியும் கவலையில்லை. இவர்கள் உள்ளம் மட்டுமின்றி உடலும் அசுத்தமானதாகத்தான் இருக்கும். கடவுளின் மீதோ, சத்தியங்கள் மீதோ இவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இருக்காது. இவர்களை விரும்புபவர்கள் வெகுசிலரே இவர்கள் வாழ்க்கையில் இருப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரவு தூக்கத்தில் அடிக்கடி இவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்களா ஜாக்கிரதையாக இருங்கள்!
Next articleலக்ஷ்மி தேவியின் அருளை நிறைவாய் பெறுவதற்கு அதிஷ்டம் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வையுங்கள் ! உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும் !