சாலை ஓரங்களில் காணப்படும் ஊமத்தையின் மருத்துவ பயன்கள்!!

0
549

ஊமத்தை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் விளைகின்றது. உம்மத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு.
ஊமத்தை இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பது போல புகையை உள்ளிழுத்து வெளியிடுவதால் சுவாச காசநோய் குணமாகும்.

ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒத்திடம் கொடுத்து வர கீல்வாயு குணமாகும். தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு ஊமத்தை இலையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.

புண்கள், அழுகிய புண்கள் குணமாக தேங்காய் எண்ணெயில், ஊமத்தை இலைச் சாற்றைக் கலந்து அடுப்பில் நீர் வற்றும் வரை காய்ச்சி, குளிர்ந்த பின்னர், சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். இதனைப் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் வெளிப்பூச்சாக பயன்படுத்தி வரவேண்டும்.

ஊமத்தை காரத்தன்மையும், கைப்புச் சுவையும் கொண்ட தாவரம். வாந்தி உண்டாக்கும். இசிவைப் போக்கும். உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும். பசியைக் குறைக்கும்.

ஊமத்தை தூக்கத்தைத் தூண்டும். வாத நோய்களைக் கட்டுப்படுத்தும். நரம்புகளைப் பலப்படுத்தும். வெளிப் பூச்சுத் தைலங்களில் இது சேர்க்கப்படுகின்றது.

Previous articleதண்ணீரை இயற்கையான முறையில் சுத்திகரிக்க சில வழிகள்…!!
Next articleகருமையான உதடுகளை சிவப்பாக்கும் சில அழகு குறிப்புகள்…!