சொட்டை விழ ஆரம்பிச்சிடுச்சா? இதை ட்ரை பண்ணுங்க! உடனே முடி முளைக்க ஆரம்பிக்கும்!

0
11836

இயற்கையான வழியில் சொட்டையான இடத்தில் முடி வளர்ச்சியை தூண்டச் செய்யம் அற்புதமான ஆயுர்வேத குறிப்புகள் இதோ!சொட்டையில் முடி வளர்ச்சியை தூண்ட என்ன செய்ய வேண்டும்?

எலுமிச்சை பழத்தின் விதையுடன், மிளகு சேர்த்து அரைத்து, அதை முடியின் ஸ்கால்ப்பில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

பூசணிக் கொடியின் கொழுந்து இலைகளை பிழிந்து அதன் சாறு எடுத்து தலையில் தடவினால், சொட்டை தலையில் முடி வளர்ச்சியை தூண்டி, அடர்த்தியான கூந்தல் பெறலாம்.

கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து, அதை சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால், வழுக்கை மறையும்.

நேர்வளங்கொட்டையை உடைத்து அதில் இருக்கும் பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தலையில் தடவி வந்தால் வழுக்கை விரைவில் மறையும்.

சீரகம், வெந்தயம், மிளகு, ஆகியவற்றை சமஅளவு எடுத்து பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Previous articleஉங்களின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டதா? கொலஸ்ட்ரோல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை!
Next articleஇதை மட்டும் செய்தால் போதும்! கருமையான உதட்டை இனி லிப்ரிக் பூசி மறைக்க தேவையில்லை.