சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2020: ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார்? மேஷம் முதல் கன்னி வரை!
சார்வரி தமிழ் வருடமானது பிறக்கும் போது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மேஷ ராசியில் சூரியனும், ரிஷபத்தில் சுக்கிரனும், மிதுனத்தில் ராகுவும், மீனம் ராசியில் புதனும், மகரத்தில் செவ்வாய், குரு, சனியும், தனுசு ராசியில் சந்திரன் கேதுவும் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
இந்த சார்வரி ஆண்டானது தமிழில் வீறியெழல் என்று பொருளில் அழைக்கப்படுகின்றது. சார்வரி தமிழ் புத்தாண்டில் சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் திடீர் திருப்பங்களும் நிறைந்த ஆண்டாக அமையவிருக்கிறது. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் என்னென்ன பலன்கள் அமையவிருக்கிறது என்பதை பார்ப்போம்.
மேஷம்
சார்வரி புத்தாண்டானது தனுசு ராசியில் துலாம் லக்னத்தில் பிறக்கிறது. மேஷ ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆண்டு பிறப்பதால் நீங்க எதிர்பாராத பணவரவு அமையும். தொழிலில் நிம்மதி கிடைக்கும் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். பணிச்சுமை குறையும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். பணம் வங்கியில் சேமிக்கும் வாய்ப்பு உண்டாகும். நீங்க செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்க உழைப்பிற்கு ஏற்ற பலன் தேடி வரும்.
உங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். செல்வம் செல்வாக்கு மேலோங்கும். வசதி வாய்ப்புகளை தரக்கூடிய ஆண்டாக இந்த புத்தாண்டு அமையவுள்ளது. மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். பிரச்சார பயணங்களை பாதுகாப்பாக செய்யுங்கள். உணவு விடயத்தில சற்று கவனமாக இருக்கவும். அதிகமாக கடன் வாங்கி பிரச்சினைகளில் மாட்டிவிடாதீர்கள்.
அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி
வணங்க வேண்டிய தெய்வம் : முருகன்
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ்புத்தாண்டு அதிகமான சந்தோஷங்களை அள்ளிக்கொடுக்கவிருக்கிறது. நீங்கள் எந்த விடயத்திற்கும் கவலைப்படாதீர்கள். பதவிகள் பட்டங்கள் உங்களை தேடி வரும். கட்சிப்பணிக்காக வீண் விரைய செலவுகள் செய்ய வேண்டிய நிலை உருவாகும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமைகள் கிடைக்கும். கோபத்தோடு பேசுவதை தவிருங்கள் அது குடும்பத்தில் பிரச்சினையை உண்டுபண்ணும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தை சம்பாதிப்பீர்கள். வேலைச்சுமை அதிகமாகும். மன அழுத்தம் நீங்க தியானம் இறைவழிபாடு செய்யுங்கள்.
இந்த வருடமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவும் சனியும் ராஜயோகத்தை தரப்போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். ராகுவினால் ஐஸ்வர்யம் கிடைக்கும். மகாலட்சுமிக்கு நிகராக செல்வம் உங்களுக்கு கிடைக்கும். சுக்கிரனைப் போன்றவர் ராகு. ராகுவைப் போல அதிகமாக கொடுப்பவர் யாருமில்லை. வீட்டில் அடிக்கடி மகாலட்சுமி பூஜை செய்யுங்கள். பெருமாளை நினைத்து வழிபடுங்க எல்லா சந்தோசமும் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான மாதங்கள்: மாசி, பங்குனி
வணங்க வேண்டிய தெய்வம் : பெருமாள்
அதிர்ஷ்ட நாள் : வெள்ளி
மிதுனம்
சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் மிதுன ராசிக்காரர்களான உங்களுக்கு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. அஷ்டம சனி உங்களை ஆட்டி வைக்கும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினையை உண்டுபண்ணலாம் எனவே குடும்பத்தில் விட்டுக்கொடுத்து வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்க திறமை வெளிப்படும். பதவி உயர்வும் எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றமும் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
எதிர்பாலினத்தாரோடு நட்புக்கொள்வதில் கவனமாக இருங்கள் இல்லாவிட்டால் செய்யாத தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். பேச்சில் கவனத்துடன் இருங்கள். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள் காப்பாற்ற முடியாம போயிரும். இந்த ஆண்டு உங்களுக்கு வருமானத்தை விட செலவுதான் அதிகம் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு பண்ணுங்க. அவசரகால நெருக்கடிகள் தீர கொஞ்சமாவது பணத்தை சேமியுங்கள் கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்டமான மாதங்கள்: ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை
வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கடகம்
கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு சார்வரி தமிழ் புத்தாண்டு முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைகிறது. அதிகாரம் மற்றும் பதவிகள் கிடைக்கும். உங்களுக்கு நல்ல மதிப்புகள் மரியாதை தேடி வரும். அரசஅதிகாரிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அரசு வேலைக்கு முயற்சிகள் செய்தால் கண்டிப்பாக வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு அதிக சம்பளத்துடன் உயர்வு கிடைக்கும்.
உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் விலகி நல்ல நிலை ஏற்படும். குரு பார்வையால் இந்த ஆண்டு சந்தோசமாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளினால் வீடு களைகட்டும். திருமண தடைகள் நீங்கி விரும்பிய வாழ்க்கை தேடி வரும். ஆண்டின் தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது சிறந்தது. மொத்தத்தில் சார்வரி தமிழ் புத்தாண்டு மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமைகிறது.
அதிர்ஷ்டமான மாதங்கள்: புரட்டாசி, மார்கழி, பங்குனி
வணங்க வேண்டிய தெய்வம் : சிவன்
அதிர்ஷ்ட நாள் : திங்கள்
சிம்மம்
உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த சார்வரி ஆண்டானது உங்களுக்கு சங்கடங்களை விட சந்தோஷங்களை அதிகமாக கொடுக்கும். இந்த ஆண்டு உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக காணப்படும். எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பீங்கள். தொழிலினால் நல்ல வருமானம் வரும். கடன் உதவிகள் கிடைக்கும். ஆறாம் வீட்டில் குரு இருப்பதால் கடன்கள் நிறைய கிடைக்கும். வங்கி கடன் உதவிகள் கிடைக்கும்.
கடன் கிடைக்கிறதே என்பதற்காக அதிகம் வாங்காதீர்கள். பொருளாதார நிலைமை அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக அமையும். இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். பெரிய பதவிகள் கைக்கு வரும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உயரதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்கள் கிடைக்கும்.
பேசும் வார்த்தைகளில் கவனத்துடன் இருங்கள் அமைதியாக இருந்தாலே பிரச்சினைகள் ஏற்படுவதை குறைக்கலாம். விட்டுக்கொடுத்து போவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. வியாபாரிகளுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சார்வரி வருடம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த ஆண்டாக அமைகிறது.
அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆவணி, தை
வணங்க வேண்டிய தெய்வம் : சூரியன்
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ் புத்தாண்டானது சுகமான ஆண்டாக பிறக்கிறது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள் பிரச்சனைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். பெண்களுக்கு பணம் மற்றும் நகை சேரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் உங்களின் திறமை வெளிப்படும் அதுவே உங்க புரமோசனுக்கு வழிவகுக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
உங்க ஆரோக்கியம் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். உங்க வீட்டில் சுப காரியங்கள் நிகளும். கணவன் மற்றும் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்களுக்கு பண பற்றாக்குறை நீங்கும். குரு பகவான் அதிசாரமாக ஐந்தாம் வீட்டில் இருப்பதால் மன இறுக்கம் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சிலருக்கு திருமணம் கை கூடி வருவதோடு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும்.
இதுவரை இருந்த கடன்களை கொடுத்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம் அதனால் கவனமாக இருங்கள். பணம் ஒரு பக்கம் வந்தாலும் செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். உங்களுக்கு சார்வரி புத்தாண்டு ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது.
அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆனி
வணங்க வேண்டிய தெய்வம் : பெருமாள்
அதிர்ஷ்ட நாள் : புதன்
By: Tamilpiththan