சர்க்கரை நோய்: சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்த சூடு நீரில் 7 வில்வ இலைகள்.

0
1256

#சர்க்கரை #நோயை – சர்க்கரை நோய்
Sakkarai Noai

இது வில்வம் அல்லது பில், வுட் ஆப்பிள் அல்லது பில்வா தாவரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாக காணப்படும் தாவரம் ஆகும். இது இந்தியாவின் புனிதமான தாவரமாக உள்ளது. இதன் மருத்துவ குணத்தால் சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது. இதன் இலை, தண்டு மற்றும் பழம் என்று ஒட்டுமொத்த தாவரமும் நமக்கு பலனளிக்கிறது.

வில்வ பழம் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இந்தோனேசியா ஆரஞ்சு போல் காணப்படும். ஆசியாவில் இந்த பழத்தை மஜா பழம் என்று அழைக்கின்றனர். இதன் சுவை கசப்பாக இருக்கும். இந்தோனேசிய புராணக்கதைகளில் ஒருவரான மஜபஹீத் என்பவருடன் இந்த வில்வ பழத்தை தொடர்புபடுத்தி கூறுகின்றனர். இந்த வில்வ தாவரத்தை இந்தோனேசியா மக்கள் நூற்றாண்டுக்கு மேல் மருத்துவ துறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவ பயன்கள்
வில்வ இலையில் உள்ள ஆன்டி பயாடிக் பொருட்கள் சில நோய்களை குணப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோய்
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் டயாபெட்டீஸ் நோய் வருகிறது. இந்த டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க வில்வ இலை உதவுகிறது. இந்த இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்தாலே போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

தயாரிக்கும் முறை
முதலில் 7 வில்வ இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி அந்த தேநீரை தினமும் 3 முறை பருக வேண்டும்.

சரும நோய்கள்
சின்னஞ் சிறிய குழந்தைகள், பெரியவர்கள் நிறைய சரும பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த மாதிரியான சரும பிரச்சினைகளுக்கு வில்வ இலை தீர்வாக அமைகிறது. இந்த வில்வ இலைகளை சரும பிரச்சினைக்கு கீழ்க்கண்ட முறையில் பயன்படுத்த வேண்டும்.

தயாரிக்கும் முறை
முதலில் வில்வ இலைகளை உலர வைத்து கொள்ளுங்கள். மஞ்சள் கிழங்கு மற்றும் அரிசி இவற்றை இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றை நன்றாக காய வைத்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சரும பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படும்.

வயிற்று போக்கு
வில்வ பழம் வயிற்று போக்கிற்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. எனவே உங்கள் வயிற்று போக்கு பிரச்சினையை ஒரு நொடிப் பொழுதில் குணப்படுத்த வில்வ பழம் கையில் இருந்தால் போதும்

தயாரிக்கும் முறை
110 மில்லி லிட்டர் தண்ணீரில் வில்வ பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். ஒரு நாளைக்கு ஒரு முறை என குடித்து வந்தால் உடனே வயிற்று போக்கு நிற்கும்.

காய்ச்சல்
வில்வ தாவரம் காய்ச்சலுக்கும் ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. உங்கள் உடம்பில் ஏதாவது நோய் தாக்குதல் ஏற்பட்டால் வில்வ வேரை பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை
110 மில்லி லிட்டர் தண்ணீரில் வில்வ வேரை போட்டு கொதிக்க விடவும். இது காய்ச்சல் மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

பக்க விளைவுகள்
இந்த வில்வ இலையால் நமக்கு ஏராளமான நன்மைகள் இருந்தாலும் ஒரு சில பக்க விளைவுகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

கருவுற்ற பெண்கள் இந்த வில்வ இலைகளை சாப்பிடக் கூடாது.

இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் நீங்கள் ஏற்கனவே மருந்து எடுத்துக் கொண்டு வந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்துவது நல்லது.

Previous article42 மணிநேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் அற்புத ஜூஸ் பற்றி தெரியுமா?
Next articleஇலங்கைக்கு படையெடுக்கும் கனடா – பிரித்தானியா மக்கள்! கொழும்பில் மூடப்படும் அதிசொகுசு ஹொட்டல்கள்