Home Patti Vaithiyam சர்க்கரை நோயாளிகள் கிர்ணி பழம் சாப்பிடலாமா! கூடாதா!

சர்க்கரை நோயாளிகள் கிர்ணி பழம் சாப்பிடலாமா! கூடாதா!

0
1057

வெயிலுக்கு இதமான பழங்களில் முலாம் பழம் என்னும் கிர்ணிப் பழம் மிக முக்கியமான ஒரு பழமாகும். இது ஒரு சுவை மிகுந்த பழம் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் பல சிறந்த ஆரோக்கிய நன்மைகளைத் தன்னிடம் கொண்டுள்ள இந்த முலாம் பழம் பற்றி அறிந்துக் கொள்வதற்காகவே இந்த பதிவு. ஆரோக்கியமான சருமம், ஆரோக்கியமான கண்கள், ஆரோக்கியமான நுரையீரல் போன்றவற்றைத் தரும் இந்த பழம், புற்றுநோயைத் தடுக்கும் வலிமைக் கொண்டது.

மேலும் மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும் கொண்டது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது, எலும்புப்புரை நோயைத் தடுக்கிறது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. இந்த தன்மைகள் இந்த பழத்திற்கு இருப்பதற்குக் காரணம், இந்த பழத்தில் உள்ள மிக அதிக அளவு வைட்டமின் மற்றும் கனிம உள்ளிருப்பு ஆகும்.

கிர்ணிப் பழம் என்பது என்ன?

முலாம் பழம் என்பது மிகவும் பிரபலமான ஒரு பழ வகையாகும். குகுர்பிடசியா குடும்பத்தைச் சேர்ந்த முலாம் பழம் 500 கிராம் முதல் 5 கிலோ வரை வளரும் பழமாகும். முலாம் பழத்தின் தாவர பெயர், குகுமிஸ் மெலோ. இதனை கிர்ணிப் பழம், முள் வெள்ளரி என்று பல பேர்களில் அழைப்பார்கள்.

ஆப்ரிக்கா, ஈரான், இந்தியா போன்ற நாடுகள் இந்த பழத்தின் தாயகமாக இருந்தாலும், கலிபோர்னியா மற்றும் ஐரோப்பா முழுவதும் இந்த பழம் பயிரிடப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து மதிப்பு

முலாம் பழத்தில் பல ஊட்டச்சத்துகள் மிக அதிக அளவில் இருப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக இந்தப் பழம் உள்ளது. USDA பிரகாரம், இந்தப் பழத்தில் கார்போஹைட்ரெட், புரதம், மற்றும் தண்ணீர் சத்து மிக அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ.

பீட்டா கரோடின், வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2. வைட்டமின் பி 6, வைட்டமின் பி 9, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்றவை முலாம் பழத்தில் உள்ளன. முலாம் பழத்தில் உள்ள கனிமங்கள், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஜின்க் போன்றவை ஆகும்.

கலோரி அளவு

100 கிராம் முலாம் பழத்தில் 34 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதனால் எடை இழப்பிற்கான உணவாக இது சிறந்த முறையில் செயல்படுகிறது.

ஆரோக்கிய நன்மைகள்

வெயில் காலங்களில் உங்கள் உடலை நீர்ச்சத்தோடு வைக்க உதவும் பழங்களில் முலாம் பழம் முக்கிய இடம் பிடிக்கிறது. அதனால் கோடைக்கு ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது. இந்த பழத்தின் பல்வேறு நன்மைகள் பற்றி கீழே காணலாம்.

கண்பார்வை மேம்படுத்த

நியுட்ரியன்ட் ஜர்னல் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஆய்வுப்படி, ஆரோக்கியமான முறையில் கண்களைப் பாதுகாக்க முலாம் பழத்தில் உள்ள வைட்டமின் சி, சியாக்சன்தின் மற்றும் கார்டினைடு போன்றவை உதவுகின்றன. கண்புரை நோய், படர்ந்த நசிவு மற்றும் போன்ற பாதிப்புகள் குறையும் வாய்ப்பு உள்ளது.

புற்றுநோய் எதிர்ப்பு

முலாம் பழத்தில் போலேட் சத்து மிக அதிக அளவு உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு மிதமான அளவு முலாம் பழத்தின் கால் பகுதியில் 25mcg ஆளவு போலேட் சத்து உள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் க்ளினிகல் ந்யுட்ரிஷன் நடத்திய முதல் கட்ட ஆய்வுப்படி, குறைந்த அளவு புற்று நோய்க்க அறிகுறிகள் இருக்கும் மனிதர்களைப் பாதுகாக்கும் தன்மை போலேட் சத்துக்கு உள்ளதாக அறியப்படுகிறது.

ஆனால் புற்று நோயின் அதிகரித்த அறிகுறிகள் காணப்படும் பிற்கால நிலைகளில் முலாம் பழம் புற்று நோயாக்கத்தை அதிகரிக்கிறது என்பதும் அறிவுறுத்தப்படுகிறது. முலாம் பழத்தின் புற்று நோய் எதிர்ப்புப் பண்புகள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

நீரிழிவைக் கட்டுப்படுத்த

போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பள்ளியில் பொது சுகாதாரத் துறையின் மருத்துவர். ஜோன் மான்சன் தனது ஆரம்பக் கட்ட ஆராய்ச்சியில் கூறுவது, முலாம் பழம், மேம்படுத்தப்பட்ட இன்சுலின் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையதாக உள்ளது என்று கூறுகிறார். அதாவது, இரத்த சர்க்கரை அளவில் சீரான மாறுபாடு இருப்பதை அதாவது, அபாயம் விளைவிக்கும் அளவில் இரத்த சர்க்கரை அளவு உயராமல் தடுக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகத்தில் விஷத்தன்மை அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது. இதனால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

மஞ்சள்-ஆரஞ்சு கலந்த நிறத்தில் உள்ள பழத்தைத் தேர்வு செய்ய வேண்டும். கெட்டியாக, கனமாக, பழத்தின் மேல் பகுதியில் மிகக் குறைந்த அளவு திட்டுக்களுடன் காணப்படும் பழங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நிறைய திட்டுக்களுடன் சுத்தம் இல்லாமல் இருக்கும் பழத்தில் சல்மோனெல்லா கிருமிகளுக்கான அபாயம் அதிகரித்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே சுகாதாரமாக கிடைக்கும் இடத்தில் பழங்களை வாங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் பழத்தை உட்கொள்ளும் முன்பு நன்றாகச் சுத்தம் செய்து பின்பு சாப்பிடலாம்.

சில தினங்கள் கழித்து உட்கொள்ளும் நிலை இருந்தால், காயாகவே வாங்கி சேகரித்து வைக்கலாம். முலாம் காய் பழத்தை விட கடினத் தன்மையுடன், லேசான பச்சை நிறத்தில் இருக்கும். அறை வெப்பநிலையில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை வைத்துக் கொள்ளலாம். முலாம் பழம் பழுக்க பழுக்க அதன் சுவை அதிகரித்துக் காணப்படும். அதனால் பெருமளவில் மக்கள் அதன் தோல் பகுதி நன்கு பழுக்கும் வரை காத்திருந்து அதனை உட்கொள்வார்கள்.

சுவைப்பதற்கு சில குறிப்புகள்
  • காலை உணவாக ஒரு சிறந்த தேர்வு முலாம் பழம். பசியுணர்வைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவு இது. பழ சாலட்டில் சேர்த்து இதனை எடுத்துக் கொள்ளலாம்.
  • முலாம் பழம், தர்பூசணி, பப்பாளி, அன்னாசிப் பழம், மாம்பழம் போன்ற பழங்களை ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிதளவு சாக்லேட் சிரப் சேர்த்து சாப்பிடுவதால் அதன் சுவை அதிகரிக்கும்.
  • புத்துணர்ச்சி தரும் சுவையை உண்டாக்க, அன்னாசிப் பழத்துடன் முலாம் பழம் சேர்த்து அதில் க்ரீக் யோகர்ட் சேர்த்து சாப்பிடலாம்.
கவனிக்க வேண்டிய குறிப்பு

முலாம் பழம் சில நேரங்களில் ஒவ்வாமை பாதிப்பை உண்டாக்கும். ஆனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் உண்டாவதில்லை. இதய நோய்க்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள், முலாம் பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காரணம், முலாம் பழம், மருந்துடன் தொடர்பு ஏற்படுத்தி, இரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

Previous articleஇலங்கை குண்டுவெடிப்பில் பலியான சகோதரர்கள் மூவருக்கும் ஒன்றாக நல்லடக்கம்! பொதுமக்கள் அஞ்சலி!
Next articleஉங்கள் வாழ்க்கையில் இந்த மிருகங்களை அடிக்கடி பார்க்கிறீங்களா! அப்போ நல்ல சகுனம் தானாம்!