சருமம் பளபளக்க பாதாம் எண்ணெய்!

0

பெண்கள் தங்களுடைய சருமப் பாதுகாபபிற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதிலும் மிகச் சமீபமாக மருதுவான மற்றும் பளபளப்பான சருமத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு அவர்கள் பல்வேறு வகையிலான அழகு சிகிச்சைகள் மற்றும் விலைமதிப்பற்ற முகப்பூச்சுகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதற்கு மிகப் பெரும் தொகையையும் செலவிடத் தயங்குவதில்லை.

நீங்கள் சருமப் பாதுகாப்பிற்கு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதில்லை எனில், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. இன்று போல்ட்ஸ்கியில், உங்கள் முகத்திற்கு மிருதுவான மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெற ஒரு இயற்கை எண்ணையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி தெரிவிக்கும் சில வழிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

நாம் இங்கே குறிப்பிடும் இயற்கை எண்ணெயானது பாதாம் எண்ணெய் ஆகும். இதில் வைட்டமின் ஏ மற்றும் பிற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் அதிகமுள்ளது. பாதாம் எண்ணை அதனுடைய பல்வேறு சரும மேம்படுத்தும் நன்மைகளுக்காக எல்லோராலும் பாராட்டப்படுகிறது.

இது உங்கள் சருமத்திலிருந்து உங்களுடைய இயற்கையான பொலிவை வெளிக் கொண்டு வருகின்றது. மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உங்களுடைய சருமத்திற்கு மென்மையான பளபளப்பை அளிக்கின்றது.

இந்த இயற்கையான பாதாம் எண்ணெயை, நீங்கள் விரும்பிய தோற்றத்தை பெற பயன்படுத்தவும். இயற்கையாகவே பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை அடைய இந்த எண்ணையை பயன்படுத்தக்கூடிய வழிகளைத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

தேன் மற்றும் பாதாம் எண்ணெய்
– ½ தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கவும்.

– இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவவும். அதன் பின்னர் இந்தப் பூச்சை ஒரு இரவு முழுவதும் உலர விடவும்.

– மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

– அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்சி செய்யவும்.

கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய்
– 1 தேக்கரண்டி அலோ வேரா ஜெல்லுடன் ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெயை சேர்க்கவும்.

– இந்தக் கலவையை சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக மசாஜ் செய்யவும்.

– அதன் பின்னர் ஒரு மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.

– அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்சி செய்யவும்.

ரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெய்
– 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெயை சேர்க்கவும்.

– இந்தக் கலவையை உங்கள் முகத்தில் மெல்லியதாக படர விட்டு ஒரு இரவு முழுவதும் உலர விடவும்.

– மறு நாள் காலையில், மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.

– அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 3 முதல் 4 முறை முயற்சி செய்யவும்.

பால் மற்றும் பாதாம் எண்ணெய்
– ஒரு பாத்திரத்தில் ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் பால் 2 தேக்கரண்டி விட்டு நன்றாக கலக்கவும்.

– இந்தக் கலவையை முகத்தை சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாக பயன்படுத்துங்கள். இந்தக் கலவையை மெதுவாக உங்கள் முகத்தில் தடவி விடுங்கள்.

– அதன் பிறகு உங்கள் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து சுத்தப்படுத்தவும்.

– அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முறை முயற்சி செய்யவும்.

பழுப்புச் சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய்
– 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் 1 தேக்கரண்டி பழுப்புச் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

– இந்தக் கலவையை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக தேய்த்து மசாஜ் செய்திடவும்.

– மசாஜ் செய்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.

– வாரத்திற்கு ஒருமுறை, இந்த முகப்பூச்சை உபயோகிப்பதன் மூலம் உங்களுடைய சருமம் மிகவும் பிரகாசமான ஒளியைப் பெறும்.

படிகாரத் தூள் மற்றும் பாதாம் எண்ணெய்
– 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெயை 1/3 தேக்கரண்டி படிகாரத்தூளுடன் நன்கு கலக்கவும்.

– இந்தக் கலவையை உங்கள் தோல் மீது மெதுவாக தடவி மிருதுவாக மசாஜ் செய்யவும். .

– அதன் பின்னர், வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு உங்களுடைய முகத்தை கழுவ வேண்டும்.

– பளபளப்பான சருமத்தைப் பெற இந்த முகப்பூச்சை ஒரு மாதத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.

எலுமிச்சை சாறு மற்றும் பாதாம் எண்ணெய்
– 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் 1/2 தேக்கரண்டி பாதாம் எண்ணெயை கலக்கவும்.

– உங்கள் முகத்தின் மீது இதைத் தடவி சுமார் 15 நிமிடங்களுக்கு உலர விடவும்.

– அதன் பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

– அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற இந்தக் கலவையை ஒரு வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும்.

பச்சை தேயிலை மற்றும் பாதாம் எண்ணெய்
– 1/2 தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் 1 தேக்கரண்டி பச்சை தேயிலையை நன்கு கலக்கவும்.

– அதன் பின்னர இந்தக் கலவையைப் பயன்படுத்து உங்களுடைய முகத்திற்கு மெதுவாக மசாஜ் செய்யவும்.

– அதன் பின்னர், மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.

– வாராந்திர அடிப்படையில் இந்தக் கலவையைப் பயன்படுத்தி பளபளப்பான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெறவும்.

ரோஜா எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்
– ஒரு கிண்ணத்தில் பாதாம் எண்ணெயை 1 தேக்கரண்டி விட்டு, அதனுடன் 2-3 சொட்டு ரோஜா எண்ணெய் சேர்க்கவும்.

– கலவையை நன்கு கலந்த பின்னர், அதை முகத்தில் மிகவும் மிருதுவாகத் தடவவும்.

– 5-100 நிமிடங்கள் கழித்து, மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.

வெள்ளரிக்காய் மற்றும் பாதாம் எண்ணெய்
– வெள்ளரிக்காயின் ஒரு சில துண்டுகளை நன்றாக நசுக்கி அதை 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் நன்கு கலக்கவும்.

– இந்தக் கலவையை உங்கள் முகத்தில் நன்கு தடவி, அதை 10 நிமிடங்களுக்கு உலர விடவும்.

-அதன் பின்னர் மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.

-அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முறை இதை முயற்சி செய்யவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளநரை பிரச்சனை தீர வேண்டுமா? இதோ உங்களுக்கான இய‌ற்கை வைத்தியம்!
Next articleஅனுமன் ஸ்லோகம் ! வெற்றி தரும் ஸ்லோகம் ! செல்வம் பெருக்கும் ஸ்லோகம் !