சருமத்தில் ஆங்காங்கே காணப்படும் மருக்களை போக்க இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க!

0

பொதுவாக சிலருக்கு உடம்பில் ஆங்காங்கே சிறு சிறு மச்சங்கள் போல் மருக்கள் காணப்படுவதுண்டு.

இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாக்கும்.

இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும்.

இதனை சிலர் அழகை கெடுப்பது போல் இருக்கும் என நினைத்து செயற்கை ஊசிகளை போட்டு தற்காலிகமாக மருக்களை கரைப்பதுண்டு.

இருப்பினும் இந்த மருக்களை ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு எளிதில் போக்கலாம். அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்த்து வந்தாலும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.

முதலில் சருமத்தில் சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். இருப்பினும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்.

எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தடவி, 20-15 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், மருக்கள் சீக்கிரம் போய்விடும்.

பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியைக் கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். மேலும் இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

கற்றாழை ஜெல்லை மரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வேண்டும். இதனால் மருக்கள் விரைவில் மறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டிலேயே இயற்கை முறையில் ப்ளீச்சிங் செய்வது எப்படி!
Next articleஉங்க ராசி இந்த 5’ல ஒண்ணா இருந்தா! நீங்க செம்ம கெத்து தான்!