முகத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய இத ட்ரை பண்ணுங்க!

0

சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் கருமையைப் போக்கவும் வேண்டுமென்றால் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த முடியும். ஆனால் முகத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய எந்த அழகு சாதனப் பொருளும் பயன் தராது.

முகத்தில் குழி குழியாக இருக்கும் பள்ளங்களை சரிசெய்ய இயற்கை வழிகளையே நீங்கள் நாட வேண்டியிருக்கும்.

தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரையில் ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சருமம் இறுக்கமடைந்து சருமுத்துளைகள் மூடிக்கொள்ளும்.

தக்காளி சருமச் சுருக்கத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது. அது சருமத்தில் உள்ள அழுக்குகளையும் முற்றிலுமாகப் போக்கிவிடும்.

தக்காளியை இரண்டாக வெட்டி, அதில் சர்க்கரையைத் தோய்த்து, முகத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இது மிகச் சிறந்த ஸ்கிரப்பாகப் பயன்படும்.

பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு, அதை சருமத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

இவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே முகத்தில் குழிகுழியாக இருக்கும் சருமப் பள்ளங்கள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇயற்கை அளித்த அற்புதம் மருத்துவ குணங்கள் நிறைந்த மாம்பூ கசாயம் குடிப்பதால் இந்த நோய்கள் ஓடிவிடும்!
Next articleபற்களின் இடையே இடைவெளி இருந்தால் இப்படி ஒரு அதிர்ஷ்டமா?