சந்திராஷ்டமம் என்றால் என்ன செய்ய வேண்டும்!
ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம், அதாவது ரிஷப ராசிக்கு எட்டாம் ராசி தனுசு ராசி. தனுசு ராசியில் மூலம், உத்திராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய 3 நட்சத்திரங்களும் இருக்கும்.
அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வரும். அந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் மன உளைச்சல், கோபம் போன்றவை அதிகம் ஏற்படும்.
சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன். மனசுக்கு உரியவன். செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும்.
அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.
ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லச்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம் – ஏன் பார்க்கப்பட வேண்டும்?
சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் நட்சத்திர சிந்தாமணி, குமார சாமியம் மற்றும் பல ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சந்திராஷ்டம காலத்தில் மனதில் தெளிவிண்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக பொறுமையின்மை, ஆத்திரம், எரிச்சல், கோபம் போன்ற எதிர்மறை குணங்களையும் தருகிறார், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த நிகழ்வுகள் நடக்கும். அன்றைய தினம் மறதி காரணமாக அலைச்சல், காரிய தோல்வி, வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை.
நம் மனம் தான் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எதைச் செய்ய வேண்டும். எது நல்லது என்று கூறுகின்றது. அந்த மனத்திற்கு காரகன் தான் சந்திரன். அவர் நல்ல நிலையில் இருக்கும் போது நல்ல யோசனைகள் திட்டங்கள் தீர்வுகள் தோன்றும். அதே சந்திரன் 8ல் மறைந்துவிட்டால் யோசனைகள் திட்டங்கள் தீர்வுகள் எல்லாம் நன்மைபயக்குமாறு அமையாது எனவே தான் அன்றைய தினம் மிக முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது என்று ஜோதிடம் கூறுகின்றது. மனம் தான் செயல் வடிவமாக, பேச்சு வடிவமாக உணர்ச்சி வடிவமாக செயல்படுகிறது அப்பொழுது அந்த மனம் நல்ல முறையில் சிந்தித்தால் தான் நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கே நன்மை பயக்குமாறு அமையும்.
சந்திராஷ்டமம் தீர்வுகள்:
இக்காலத்தில் அமைதியை நாடி பொறுமையுடன் இருக்க வேண்டும். யாரிடமும் தேவையில்லாத சொற்களை கூறவேண்டாம். முடிந்தவரை முக்கிய முடிவுகளை ஒத்திப் போடுங்கள்.
சுபமான நிகழ்வுகளை சந்திராஷ்டம காலங்களில் நடத்த பரிந்துரைக்கப்படுவதில்லை. இக்காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்காமல் ஒத்தி வைக்கலாம். கடன் கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்கலாம். பேச்சைக் குறைத்து இறைவனை மனதில் வழிபட்டு தியானித்தல் நல்ல பலன்களைத் தரும்.
மனஅமைதிக்கு சந்திரனின் அதிதேவதையான பார்வதியை வணங்கி, சிவபுராணம் படித்தல் நன்று. மனதை ஒருமுகப்படுத்தும் யோகா – தியானம் – பிராணாயாமம் போன்ற முறைகளை கடைபிடித்து “ இன்று நாள் முழுவதும் பொறுமை காக்க வேண்டும்” எனும் தீர்மானத்துடன் இருப்பின் தொல்லைகள் குறையும். மிகமுக்கிய பிரச்சனைகள் மேலும் சிக்கலாகாமல் தவிற்கலாம்.
சில எளிய பரிகாரங்களை :
ஒரு நெல்மணியை இடது கை புஜத்தில் பிளாஸ்திரி மூலம் ஒட்டிக் காெள்வது … அரிசி மாவை பூசி சிறிது நேரம் கழித்து குளிப்பது … திரிந்த பாலில் தயாரான ரச குல்லா சாப்பிடுவது போன்றவைகளை செய்து தாக்கத்தை குறைத்துக் கொள்ளாலாம் ..சந்திர காயத்ரி ஜபிக்க நல்ல பலனை தரும் ..!
தானம்:
சந்திராஷ்டம காலத்தில் சந்திரனின் தானியமான அரிசியை ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்யவது சிறப்பு.
சந்திராஷ்டமம் – வழக்கமான பொது ராசிபலன் போல சிலருக்கு அனுபவத்தில் ஒத்து வருவதில்லை. காரணம் ஒருவர் பிறக்கும்போதே சந்திரன் லக்கினத்திற்கு 6, 8 அல்லது 12ல் அமையப் பெற்றவர்களுக்கு சந்திராஷ்டமம் குறிப்பிடத்தக்க எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.
ஆயினும் சுப காரியங்களை சந்திராஷ்டம தினத்தில் நடத்துவது வழக்கமல்ல, நல்லதல்ல. வழக்கமான காரியங்களையும், முன் கூட்டியே முடிவு நிச்சயிக்கப்பட்ட செயல்களையும் தாராளமாக செய்யலாம்