தொடையில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க!

0

கொழுப்புத் தேக்கம் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. உடலில் கொழுப்புக்களானது அடிவயிற்றிற்கு அடுத்தபடி தொடையில் தான் அதிகம் தேங்கும். தொடையில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் எந்த ஒரு பேண்ட்டையும் போட முடியாமல் போகும்.

இப்போது நாம் பார்க்கப் போவது தொடையில் தேங்கியுள்ள கொழுப்பை வேகமாக கரைப்பதற்கான சில எளிய இயற்கை வழிகளைப் பற்றி தான். தொடையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைப்பதற்கு தினமும் உடற்பயிற்சிகளை செய்து வருவதோடு, உண்ணும் உணவுகளிலும் ஒருசில மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

இங்கு தொடையில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கு பின்பற்ற வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அன்றாட உடற்பயிற்சியுடன் தினமும் பின்பற்றி வந்தால் வேகமாக தொடையில் உள்ள கொழுப்பைக் கரைக்கலாம்.

தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது, தினமும் 2-3 வகையான புரோட்டீன் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க உடலுக்கு வேண்டிய போதுமான அளவு ஆற்றல் கிடைக்கும்.

அலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்த்து, அடிக்கடி சிறு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதன் மூலமும் தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.

அன்றாட உணவுகளில் மிளகாயை சேர்த்து உட்கொண்டு வர வேண்டும். இப்படி மிளகாயை உணவில் சேர்த்து வருவதன் மூலம், தொடை மற்றும் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும். இதற்கு மிளகாயில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம்.

நட்ஸில் புரோட்டீன், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. எனவே இதனை ஸ்நாக்ஸாக உட்கொண்டு வந்தால், உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கும். இதன் மூலம் சற்று அதிகமாக உடற்பயிற்சியை செய்யலாம்.

நீச்சல் அடிப்பதன் மூலம், தொடையில் மட்டுமின்றி, உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள கொழுப்புக்களை கரைக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு நீச்சல் மிகவும் சிறந்த உடற்பயிற்சி.

மாதத்திற்கு 1 முறை மலையேறும் செயல்களில் ஈடுபட்டு வந்தால், மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, கால்களும், உடலும் சிக்கென்று இருக்கும்.

மனிதனுக்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் ஆற்றல் மேம்படுத்தப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும்.

சிட்ரஸ் பழங்களை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சிட்ரஸ் அமிலம், கொழுப்புக்கள் வேகமாக கரைய உதவும். மேலும் ஸ்நாக்ஸ் நேரங்களிலும் சிட்ரஸ் பழங்களை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது.

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தொடை சிக்கென்று இருக்கும். ஏனெனில் நார்ச்சத்துள்ள உணவுகள் போதுமான ஆற்றலை வழங்கி, ஒருவரை சுறுசுறுப்புடன் இருக்க உதவும். ஒருவர் சுறுசுறுப்புடன் இருந்தால், அவரால் எளிதில் தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கலாம்.

இரும்புச்சத்துள்ள உணவுகள் இரத்தத்திற்கு மட்டும் நல்லதல்ல, உடலின் ஆற்றலுக்கும் முக்கியமானது. எப்போது ஒருவர் இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்கிறாரோ, அவரது உடலில் ஆற்றலும் அதிகமாக இருக்கும். ஆற்றல் அதிகம் இருந்தால், நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, வேகமாக கொழுப்புக்களைக் கரைக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபேக்கிங் பவுடருக்கும் பேக்கிங் சோடாவுக்கும் வித்தியாசம் தெரியுமா ரெண்டையும் எப்படி கண்டுபிடிப்பது!
Next articleவெங்காயத்தை நசுக்கி ஒத்தடம் தருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?