கொழுப்பை குறைத்து பல வியாதிகளை தடுக்கும் வெந்தயத்தை எப்படி சாப்பிடலாம்!

0
501

கேலக்டோமேனன் என்கிற நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் வெந்தயத்தில் அதிகமாக உள்ளது. இந்த வேதிபொருள் பசியை கட்டுப்படுத்துகின்றது. அதன் காரணமாக நாம் பசியை உணர மாட்டோம். அதன் விளைவாக் நம் உடலில் தேங்கியுள்ள அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு நம்முடைய உடல் எடை கட்டுப்படுத்தப்படுகின்றது.

இங்கே நாங்கள் எவ்வாறு வெந்தயம் உங்களின் எடையைக் குறைக்க உதவுகின்றது என்பதைப் பற்றி விரிவாக தெரிவித்துள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கொழுப்பு எரிக்கப்படும்
வெந்தயத்தில் உள்ள கேலக்டோமேனன் உங்களின் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகின்றது. அதன் காரணமாக உங்கள் உடலில் உள்ள அதிகப் படியான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் எரிக்கப்பட்டு உங்களின் உடல் எடை குறைகின்றது.

வயிறு நிரம்பும் :
வெந்தயத்தை உட்கொள்ளும் பொழுது நம்முடைய வயிறு எப்பொழுதும் முழுவதுமாக நிரம்பி இருக்கின்றது என்கிற உணர்வு நமக்கு ஏற்படுகின்றது. அதன் காரணமாக நமக்கு பசி எடுப்பதில்லை.

மலச்சிக்கல் :
வெந்தயத்தில் உள்ள நார் பொருட்கள் மலச்சிக்கல் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவுகிறது. மேலும் இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு எரிக்கப்படுகின்றது.

எப்படி வெந்தயத்தை சாப்பிடலாம்:
சூடான வெந்தயத்தை நன்றாக பொடி செய்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்தி வர வேண்டும். உங்களால் முடியாது எனில், உங்களின் சாப்பாட்டில் இதை கலந்து சாப்பிடலாம்.

எப்படி வெந்தயத்தை சாப்பிடலாம் :
2. முளைகட்டிய வெந்தயம்:
இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளன. முளை கட்டிய வெந்தயத்தை தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் உண்டு வர உங்களின் எடை கனிசமாகக் குறையும். உங்களூக்கு சந்தேகம் இருந்தால் நீங்களே இந்த முறையை முயற்சி செய்து பார்த்து வித்தியாசத்தை உணருங்கள்.

எப்படி வெந்தயத்தை சாப்பிடலாம்:
3. நீரில் ஊற வைத்த வெந்தயம்:
ஒரு உள்ளங்கை நிறைய வெந்தயத்தை எடுத்து அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி விட்டு வெந்தயத்தை வெறும் வயிற்றில் மென்று தின்ன வேண்டும். இவ்வாறு செய்வதால் நீங்கள் அன்று முழுவதும் சுறு சுறுப்பாக உணர்வீர்கள். மேழும் உங்களின் வயிறு நிறைந்தது போல் தோன்றும். அதனால் பசிக்காது. உடல் எடையும் குறையத் தொடங்கும்.

எப்படி வெந்தயத்தை சாப்பிடலாம்:
4.வெந்தயம் தேநீர் :
வெந்தயம் மற்றும் தேன் ஆகிய இரண்டும் ஒரு அற்புதமான மூலிகைக் கலவை ஆகும். இவை இரண்டும் உங்களின் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன வெந்தயப் பொடியில் தேநீர் தயாரித்து அதனுடன் தேன் மற்றும் எழுமிச்சைசாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தி வர உங்களின் எடை குறையும்.

Previous articleமன அழுத்தத்தைப் பற்றி உளவியாளர்கள் என்ன சொல்கிறார்கள்!
Next articleரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரிப்பது எதன் அறிகுறிகள் என தெரியுமா உங்களுக்கு!