எலுமிச்சை ஒரு பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன உணவுப் பொருளாகும். தர்பூசணி ஒரு இயற்கை வயாகரா என மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் போற்றப்படும் பொருள்.
இவை இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ், உடலில் உள்ள நச்சுக்களை போக்கு, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் அளிக்கின்றன. இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது, இதை பருகுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்!
*துண்டு துண்டாக வெட்டிய தர்பூசணி – 500 கிராம்
*எலுமிச்சை – 2
*நறுக்கிய பேரிக்காய் – 3
செய்முறை!
*பேரிக்காயை நன்கு கழுவு, விதைகளை நீக்கிவிட்டு, நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
*எலுமிச்சையின் தோலை நீக்கிவிட்டு தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
*தர்பூசணியை துண்டு துண்டாக வெட்டி, அதை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
*பிறகு பேரிக்காய், எலுமிச்சை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
*நீண்ட நேரம் எடுத்து வைக்காமல், உடனே பருக வேண்டும்.
வைட்டமின் சத்துக்கள்!
இந்த தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ்குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்…
வைட்டமின் A, B, B1, B2, C மற்றும் E
ஆரோக்கிய நன்மைகள்!
உடலில் உள்ள நச்சுக்களை போக்க உதவி புரியும் இந்த தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்…
*தூக்கமின்மை கோளாறு விலகும்.
*சளித்தொல்லை நீங்கும்.
*உடலில் ஆன்டி-பயாடிக் அதிகரிக்க உதவுகிறது.
*ஆன்டி- கொலஸ்ட்ரால் தன்மை கொண்டுள்ளதால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.
*ஆன்டி-ஆக்ஸிடெண்ட் நன்மை கொண்டுள்ளது.
*இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
*செரிமானம் சிறக்க உதவும்.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
*மலமிளக்க பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
*உடல் எடை குறைக்க பயனளிக்கும்.
குறிப்பு!
தேவை என்றல் ஐஸ் கியூப்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை தவிர்த்துக் கொள்ளவும்.