கொரோனா வைரஸால் குணமடைந்தவரின் அனுபவங்கள். அதிகம் இதை தான் குடித்தாராம்.

0
946

இலங்கையில் கொரோனா வைரஸால் முதன்முதலில் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த 52 வயதான சுற்றுலா வழிகாட்டி தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி விபரித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தனது அனுபவங்களை பகிா்ந்துள்ளார்.

“கொரோனா வைரஸ் தொற்றிய பின் எனக்கு தொண்டையில் வலி ஏற்பட்டது. பின்னர் இரவில் எனக்கு முடியாமல் போனது.

இதற்கு மருந்து எடுக்கும் போது எனக்கு தொண்டையில் கட்டி என வைத்தியர் கூறி மருந்து தந்தார். மருந்தை குடித்த பின்னா் எனக்கு காலையில் சுகமாகியது. எனினும் மீண்டும் இரவு முடியாமல் போனது.

எனக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னா் மிகவும் பயம் ஏற்பட்டது. ஆனால் வைத்தியசாலைக்குச் சென்று அனுமதிக்கப்பட்ட பின் மருத்துவம் செய்வதைப் பார்த்த பிறகுதான் சுகமாகி விடுவேன் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

IDH வைத்தியசாலையின் சேவை மிகவும் சிறந்தது. எனக்கு தினமும் 6 – 7 Lit சுடு நீரே வழங்கினார்கள். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்பட்டு இருந்தேன்.

பின்னர் எனக்கு சிறப்பான வைத்தியம் பார்க்கப்பட்ட பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது நான் சுகமாகி விடுவேன் என்று” என கொரோனாவால் முதன்முதலில் பாதிக்கப்பட்டவரும், அதிலிருந்து குணமடைந்தவருமான நபர் கூறினார்.

By: Tamilpiththan

Previous articleகொரோனா தோன்றுவதற்கு இது தான் காரணமா? என்ன நடக்கிறது இந்த உலகில்? LOGIC தெரிந்தவர்கள் சற்று சிந்திக்கவும்!
Next articleகொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற‌ பெற்றோர்களே உங்க குழந்தைங்க கையில் முதல்ல இதை கட்டுங்க !