பொதுவாக சிறுவர்களோ அல்லது இளைஞர்களோ ஏதாவது விளையாட்டாக கண்டுபிடிக்கும் போது அவர்களை வில்லேஜ் விஞ்ஞானி என்ன கிண்டல் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இளைஞர் ஒருவர் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொசு தொல்லை என்பது தற்போது பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. அதற்காக நாம் பல்வேறு தடுப்பு முறைகளை எடுத்தாலும் கொசுக்களை கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியமாகவே இருந்து வருகிறது.
வீட்டில் கொசு வலை,கொசுக்களை எதிர்க்கும் மருந்துகள் என பல வகைகளில் கொசுக்களை கட்டுப்படுத்த நாம் முயன்று வருகிறோம்.
This guy is living in 3019. pic.twitter.com/MskJDye6wi
— Bade Chote (@badechote) March 28, 2019
This guy is living in 3019. pic.twitter.com/MskJDye6wi
— Bade Chote (@badechote) March 28, 2019
அந்த வகையில் கொசு பேட் பல்வேறு வீடுகளில் பயன்படுத்தபடும் ஒன்று. சீனா இறக்குமதியான இந்த கொசு பேட் தான் நமது தூக்கத்திற்கு பல வகைகளில் துணை புரிகிறது.
இதனிடையே இளைஞர் ஒருவர் இரவில் தொந்தரவு இல்லாமல் தூங்குவதற்காக டேபிள் பேனில் கொசு அடிக்க பயன்படும் பேட்டை கட்டிவைத்து கொண்டு தூங்கும் வீடியோ தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.