வழுக்கை தலை: ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு ரேவதி அம்மாவோட சிறந்த வைத்தியம்! அவசியம் பாருங்க!

0
6173

வழுக்கை தலை: கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி, அதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்றாக வளரும்.கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை பொடிகளை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், நீளமாக முடி வளரும்.ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்து அதை தூள் செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து அதை காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருமையாக வளரும்.

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நீரில் வேகவைத்து, பின் அந்த நீரை ஒரு நாள் கழித்து தலைக்கு ஊற்றி கழுவி வந்தால் கொத்தாக முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தை அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வர முடி வளர்வதை காணலாம். வெங்காயம் சாறு முடி இழப்பு, மற்றும் புதிய முடி வளர நல்லது.தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து, அதனுடன் வெந்தயப் பொடி, குன்றிமணி பொடி சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, ஆறிய பின் அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி தலை முடிக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாக, அடர்த்தியாக வளரும். அதிமதுரத்தை, தண்ணீரில் போட்டு காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து, பின் 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.கேரட் சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து, பின் அதை நன்றாக காய்ச்சி அந்த எண்ணெயை வாரம் மூன்று நாட்கள் தலையில் தேய்த்து குளித்தால், நன்றாக முடி வளரும்.

Previous article70 வயதிலும் அழகு பதுமை: ஆச்சரியத்தில் அதிர்ந்த உலகம்!
Next articleஇன்றைய ராசிபலன் 6.6.2018 புதன்கிழமை !