வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி!

0

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால் தான், நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அது தோல்வியில் முடிவதுடன், துன்பங்களை அதிகம் அனுபவிக்க வேண்டியிருக்கும். ஒருவரது வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிய ஏராளமான வழிகள் உள்ளன.

இங்கு வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அறியும் ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதுக் கொண்டு உங்கள் வீட்டில் கெட்ட சக்தி உள்ளதா என்பதை சோதித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் எங்கு இருந்தாலும், நம்மைச் சுற்றி அங்கு சில ஆற்றல்கள் இருக்கும். வீடு என்பது ஒற்றுமைக்கான இடம்.

இங்கு அனைத்துவிதமான ஆற்றல்களும் சந்திக்கும். நமது உணர்வுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் குறிப்பிட்ட ஆற்றல்களை உமிழும். அதே சமயம் குறிப்பிட்ட ஆற்றல்களை ஈர்க்கும்.

குடும்ப உறுப்பினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டிற்கு வரும் போது, அவர்களுடன் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரக்கூடும். இப்படி எதிர்மறை ஆற்றல்கள் வீட்டினுள் நுழைந்துவிட்டால், அது வாழ்க்கையையே பெரிதாக பாதிக்கும்.

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அதனால் வீட்டினுள் எந்நேரமும் சண்டை சச்சரவுகள், உறவுகள் முறிவது மற்றும் வீட்டில் நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படும். அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ளோர்கள் ஏதோ பேய் அடித்தது போன்று மிகுந்த களைப்புடனும், ஒய்வின்றி இருப்பது போன்றும் உணர்வார்கள். மொத்தத்தில் சந்தோஷமே இருக்காது.

கண்ணாடி டம்ளர்

கல் உப்பு

கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பு போட்டு, தண்ணீரை முழுமையாக நிரப்பி, எந்த அறையில் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்ற சந்தேகம் உள்ளதோ, அங்கு மறைமுகமான இடத்தில் வைத்துவிட்டு, 24 மணிநேரம் கழித்து காண வேண்டும். முக்கியமாக டம்ளர் வைத்த இடத்தை நகர்த்தக்கூடாது.

24 மணிநேரம் கழித்து அந்த டம்ளரைப் பார்க்கும் போது, அது வைத்த இடத்திலேயே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால், அந்த அறையில் கெட்ட சக்தி இல்லை என்று அர்த்தம். ஒருவேளை ஏதேனும் மாற்றம் தெரிந்தால், ஏதோ ஒரு சக்தி அந்த அறையில் உள்ளது என்று அர்த்தம். இந்த முறையை வீட்டில் உள்ள வேறொரு அறையிலும் முயற்சிக்கலாம்.

மேலும் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகரும்பு சாறு குடிப்பதால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?
Next articleஇந்த இடத்தில் உப்பு வைத்தால் செல்வ வளம் குறையவே குறையாது.!