குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லை; சற்றுமுன் தகவல்! குழந்தையின் அழுகை சத்தம் கேட்கவில்லை! தலையை சுற்றி மண்சரிவு – பதற்றத்தின் மத்தியில் நகரும் நிமிடங்கள் !

0

குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 36 மணி நேரத்தை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

36 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்க மீட்புப் படையினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது குழந்தை 82 அடி ஆழத்திலேயே இருப்பதாக மீட்புப் பணியில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லையென தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றிரவு (26) குழந்தையின் உடல் உஷ்ணம் இருந்தது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

100 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம் 7 வீரர்கள் தயார் நிலையில்!!

குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

குழந்தை இருக்கும் குழிக்கு அருகில்

ரிக் இயந்திரம் மூலம் தற்போது அகலமான குழி தோண்டப்படுகிறது

100 அடியை எட்டியதும் உள்ளே இறங்கி குழந்தையை மீட்க ஆறு பேர் கொண்ட குழு குழிக்குள் இறங்க தாயாரான நிலையில்

தற்போதைய நிலவரம் சுரங்கம் வழியே குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தனி ஒருவனாக சென்று மீட்டுவரத் தயார் என வீரர்களில் ஒருவரான நகைமுகன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினமான இன்று உலகத் தமிழர்களின் பிரார்த்தனையாக சிறுவன் சுஜித்தை எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும் என்பதாகவே அமைந்துள்ளது.

ஊடகங்கள் ஊடாக உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் சிறுவன் சுஜித் மீட்கப்படும் காட்சிகளை கண் கலங்கியபடி பார்த்து வருகின்றனர்.

எப்டியாவது சுஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்ணீருடன் காத்திருக்கின்றனர் தமிழர்கள்.

சுஜித் என்ற சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனை தொடர்கிறது.

தலையை சுற்றி மண்சரிவு – பதற்றத்தின் மத்தியில் நகரும் நிமிடங்கள் !

திருச்சி – மணப்பாறையில், நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் சுமார் 13 மணித்தியாலங்களுக்கு மேலாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தின் தலையை சுற்றி மண் சரிந்துள்ளதாகவும், சுர்ஜித்தின் அழுகை சத்தம் எதுவும் கேட்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித் நேற்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இது தொடர்பில் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது குழந்தையை மீட்பதற்காக கயிறு மூலம் அவரின் கையில் சுருக்கு போடப்பட்டது. ஒரு கையில் சுருக்கு போட முடிந்த போதும் மற்றைய கையில் போட முடியவில்லை என தெரியவருகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் குழந்தையை மீட்பதற்காக பக்கவாட்டில் குழி தோண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அதுவும் தோல்வியில் முடிந்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு தடையின்றி ஒட்சிசன் வழங்கப்பட்டு வந்ததால் அனைவரும் நிம்மதியாக இருந்து வந்தனர்.

இரவு நேரத்தில் குழந்தை பயந்துவிட கூடாது என்பதற்காக அவரின் அம்மா மேரி குழந்தையுடன் பேசிய போது, “அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே” என அவர் கூற குழந்தை “உம்” என்று பதிலளித்துள்ளார்.

எனினும் நேரம் செல்லச்செல்ல குழந்தை சோர்வாகி விட பெற்றோர் பதற்றமடைந்துள்ளனர்.

இப்படியான சந்தர்ப்பத்திலேயே ஆழ்துளை கிணற்றுக்குள், குழந்தையின் தலையை சுற்றி மண் சரிந்துள்ளதாகவும் இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேநேரம், தற்போது சுஜித்தின் சத்தம் கேட்கவில்லை என்றும், குழந்தையின் நிலைமையை கண்டு தாயாரான கலாமேரி திடீரென மயக்கமடைந்துள்ளதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் ஒவ்வொரு நொடியும் பதற்றத்தின் மத்தியில் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரியவருகிறது.

மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,

குழந்தையின் அழுகை சத்தம் இப்போது கேட்கவில்லை என்ற போதும் கூட அவரிடம் அசைவு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தலைமேல் மண் சரிந்திருக்கிறது. அதனால், ஒட்சிசன் செலுத்துவதில் சிரமம் உள்ள போதும் முடிந்தவரை ஒட்சிசன் அனுப்பப்படுகிறது.

சம்பவ இடத்தில் மருத்துவ குழுக்கள், நோயாளர் காவு வண்டி என்பன தயார் நிலையில் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅஸ்வினி முதல் சித்திரை வரை எந்த நட்சத்திரக்காரர்களுக்கு குருபகவான் செல்வங்களை அள்ளி தர போகிறார்?
Next articleசுர்ஜித்தை மீட்க போராடும் மீட்பு பணி நேரடி நேரலை காட்சி ஒலிபரப்பு வீடியோ!