குழந்தைக்கு ஒரு வயதிற்கு முன்பு ஜாதகம் கணிக்கலாமா?

0

ஒரு வயதுக்கு முன் ஜாதகம் கணிக்கக்கூடாது என்று சில கட்டுப்பாடுகள் இருக்கிறது என்ற ஐதீகம் உண்டு.

ஆனால், குழந்தைக்கு ஒரு வயதுக்கு முன்பு ஜாதகம் கணிக்க எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லை. எந்த ஜோதிடத்திலும் ஒரு ஆண்டு அல்லது இத்தனை நாள் கழித்துதான் ஜாதகம் எழுதப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் குறிப்பிடப்படவில்லை.

ஏன் அப்படி ஒரு எழுதப்படாத சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால்,

அந்த காலத்தில் ஜோதிடர்கள் மிகக் குறைவு, ஜாதகம் எழுத அமர்ந்தால் ராசி, நவாம்சம், த்ரேக்கானம், பாவகம், சஷ்டியாம்சம், சப்தாம்சம் வரை போட்டு மாத வாரியாக பலன், தசா புத்தி வாரியாக பலன், தினசரி பலன் என்று மிகவும் விரிவாக எழுதுவார்கள். அதற்கு நாட்கள் மிகவும் அதிகமாக ஆகும். மேலும் அந்த காலத்தில் மருத்துவர்களும் மிக குறைவானவர்களே இருந்ததால் உடல்நலக்குறைவால் சிசு மரணங்களும் தவிர்க்க முடியாததாக இருந்தது. அதனால் ஜாதகம் எழுத குறைந்தது ஓராண்டாவது ஆகும் என்றார்கள். மற்றபடி எந்தவிதமான ஜோதிட காரணங்களும் இல்லை.

ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் எந்த குழந்தையின் ஜாதகமும் அந்த ஜாதகருக்கு பதிமூன்று வயதாகும் வரை அந்த வீட்டிற்கு எந்த பலனையும் தராது. அந்த குழந்தைக்கும் அதன் தாய்க்கும் மட்டுமே பலன் காணமுடியும், அதன் தந்தைக்கு பலன் தராது. ஆனால் நடைமுறையில் ஒரு ஜாதகர் பிறந்தவுடன் தாத்தாவுக்கும், பாட்டிக்கும், சித்தப்பன், சித்திக்கும் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

ஒரு குழந்தையின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு அவரது தந்தைக்கு பலன் சொல்லும் போது அந்த தந்தையின் ஜாதகப்படிதான் பலன்கள் நடைபெறும். ஆனால் ஜோதிடர் கையில் இருப்பது குழந்தையின்

ஜாதகம். அதனால் கேட்பவர்களுக்கு குழந்தை பிறந்த நேரம் சரியில்லை போலிருக்கிறது என்று அந்த குழந்தையின் பேரில் இனம் புரியாத கோபம் மனதுக்குள் உருவாகிவிடும். அது அந்தக் குழந்தையின் எல்லா காலத்திலும் பேசப்படும்.

அது குழந்தையின் வாழ்நாளை மிகவும் பாதிக்கும். ஒரு தாழ்வு மனப்பான்மையை அந்த குழந்தையின்பால் வளர்த்துவிடும். அந்தக் குழந்தையின் முன்னேற்றத்தை தடுக்கும். மொத்தத்தில் குழந்தைகளுக்கு ஜாதகம் கணிப்பதற்கு வயது ஒரு காரணம் இல்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 23.01.2019 புதன்கிழமை !
Next articleஜாதக ரீதியாக குழந்தைபேறு எப்படி அமையும் குழந்தையின் குண நலன் எப்படி இருக்கும்!