குறைவான தூக்கம் தூங்குபவர்களுக்கு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்! காரணம் இது தான்!

0
378

மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் என்றால், தன்னைத்தானே வருத்திக்கொள்வது, தற்கொலை எண்ணம் போன்ற பல்வேறு விதமான மனநலப் பிரச்சினைகள் உருவாக காரணம். போதுமான தூக்கமின்மையும் தான் என்கிறது அமெரிக்க ஆய்வகம்.

இதுகுறித்து ஸ்லீப் சஞ்சிகை 1,10,496 மாணவர்கள் மற்றும் 8,462 விளையாட்டு வீரர்களிடம் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி எழுத்தாளராகத் திகழும் அரிசோனா பல்கலைக்கழகப் பேராசிரியர் தியா ராம்சே இதுகுறித்து தெரிவிக்கையில், ”கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மனக்கவலைகள், தற்கொலை எண்ணம் உள்ளிட்ட மனநோய் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளைப் பார்க்கையில் இப்பிரச்சினைகளுடன் தூக்கமின்மை எவ்வளவு வலிமையான தொடர்பு கொண்டுள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது” என்றார்.

தூக்கமின்மை ஏற்படும் ஒவ்வொரு கூடுதலான இரவும் மனநோய்க்கான அறிகுறிகள் சராசரியாக 20 சதவீதம் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

தூக்கமின்மையின் ஒவ்வொரு நாளும் கூடுதலாக அதிகரிக்கும் ஆபத்துகளின் பட்டியல்:

  • 21 சதவீதம் மனச்சோர்வு,
  • 24 சதவீதம் தன்னம்பிக்கையின்மை
  • 24 சதவீதம் கோபம், 25 சதவீதம் கவலை,
  • 25 சதவீதம் தன்னை வருத்திக்கொள்ளும் விருப்பம்,
  • செயல்பாட்டு பிரச்சினைகளுக்கு 28 சதவீதம்
  • மற்றும் தற்கொலை எண்ணம் 28 சதவீதம்.

”நமக்குத் தேவையான ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவு தூக்கம் அவசியம். ஆனால் கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் சரிவரத் தூங்குவதில்லை” என்கிறார் பேராசிரியர் மைக்கேல் கிராண்டர்.

Previous articleஅன்றாடம் உலர் திராட்சை சாப்பிடுவதால்! உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா!
Next articleகாஃபி பிரியர்களுக்கு ஒரு முக்கியமான நற்செய்தி! காஃபி இதயத்திற்கு நல்லாதாம்! சுவாரஷியமான தகவல்!