Home Rasi Palan ராசி பலன் Guru Peyarchi Palangal குரு பெயர்ச்சி பலன்கள் 2019: கடகத்திற்கு ஆறில் குரு நோய்கள் தீரும் !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: கடகத்திற்கு ஆறில் குரு நோய்கள் தீரும் !

0
1200

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடக ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்க்கு குரு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. கடக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல வளர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் கடகத்தில் குரு உச்சமடைபவர். கடகத்திற்கு குரு நன்மையை அள்ளித்தருபவர்.

5ஆம் வீட்டில் இருந்து ருண ரோக ஸ்தானம் என்னும் ஆறாம் வீட்டிற்கு வருவதால் அவருடைய பார்வை தொழில் ஸ்தானமான 10ஆம் வீடு, அயன ஸ்தயன ஸ்தானமான 12ஆம் வீடு, 2ஆம் வீடான தன வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. குரு பார்க்கும் இடங்கள் பளிச்சிடும். ஆறாம் வீட்டில் சனி கேது இருக்கின்றனர். கூடவே குரு போய் அமர்கிறார். எதிரிகள் அடையாளம் தெரிந்தும் நல்ல காலம் தொடங்கிவிட்டது.

நோயை அடையாளம் காட்டும் குரு

கடன் நோய் எதிரி ஸ்தானத்தில் குரு அமர்வதால் கடன் வாங்க வைக்கும் உடம்பில் உள்ள நோய்களை சுட்டிக்காட்டும். நிவர்த்தி கிடைக்கும் நன்மையே நடைபெறும். கடன் மூலம் சொத்து சேர்க்கலாம் 9ஆம் அதிபதி உங்களுக்கு கடன் மூலம் ஆசைகளை நிறைவேறுவார். உடம்பில் இருந்த ரோகங்கள் வெளியே தெரியவருவதால் இத்தனை நாட்களாக உங்களை வாட்டிக்கொண்டிருந்த வியாதியை இனம் காண்பீர்கள். நோய்கள் தீரும் காலம்.

கடன் உதவி கிடைக்கும்

கடன் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு கடன் உதவி கிடைக்கும். எதிரிகள் இருந்தும் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் உடல் நலனின் அக்கறை தேவை. அளவிற்கு மீறி கடன் வாங்க வேண்டாம். நோய்களை பயப்பட வேண்டாம். எதையும் எதிர்த்து போராடி வெல்வீர்கள். ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்க விபரீத ராஜயோகம் வந்திருக்கிறது.

வேலை கிடைக்கும்

மேஷம் ராசி உங்களுக்கு தொழில் ஸ்தானம். உங்க 10வது வீட்டின் மீது விழுவதால் போட்டி தேர்வில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை கிடைக்க வைக்கும். அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

கடன் தீர்க் வருமானம்

குரு பார்வை உங்கள் ராசிக்கு 2ஆம் வீடான சிம்மத்தின் மீது குரு பார்வை விழுவதால் வருமானம் அதிகரிக்கும். கடன்களை தீர்க்க வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். சிலருக்கு கோர்ட் வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்குவீர்கள். குரு உங்க ஆசைகளை நிறைவேற்ற கடன் மூலம் பணத்தை தருவார். பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். இந்த கால கட்டத்தில் அளவாக கடன் வாங்குங்கள்.

வெளிநாட்டு பயணம்

குரு பார்வை உங்கள் ராசிக்கு 12 ஆம் வீடான மிதுனத்தின் மீது விழுவதால் சுப விரையம் வெளிநாட்டு பயணம் கல்வியில் முன்னேற்றம். கல்விக்கடன் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்ப உறவு பூத்து குலுங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு இருந்த தடைகள் விளங்கும்.

சுப விரையங்கள்

வெளிநாட்டு கல்வியில் படிக்க கல்விக்கடன் கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும். தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு மனை. வாங்கும் வாய்ப்பும் வரும். நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடல் நலனை பத்திராமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

பைரவர் வழிபாடு நன்மை

வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது. இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். வியாழக்கிழமை சித்தர்கள் ஜிவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது நல்லது. சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு வெற்றிகளைத் தருவார். இந்த குரு பெயர்ச்சியால் யோகங்கள் அதிகம் உண்டு. கடகத்திற்கு வளர்ச்சியான குரு பெயர்ச்சியாகும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷ ராசிக்கு ஒன்பதுல குரு – என்னென்ன பலன்கள் !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: ரிஷப ராசிக்கு அஷ்டம குரு – விபரீத ராஜயோகம் !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மிதுனம் ராசிக்கு களத்திர குரு- அற்புதங்கள் நிகழும் !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: கடகத்திற்கு ஆறில் குரு நோய்கள் தீரும் !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: புண்ணிய குருவால் சிம்மத்திற்கு பொன்னான நேரம் !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: நான்காமிட சுக குருவால் கன்னிக்கு கவலைகள் தீரும் !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: தைரிய குருவால் துலாம் ராசிக்காரர்களுக்கு கனவு நனவாகும் !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: குடும்ப குருவால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு குதூகலம் ஆரம்பம் !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: ஜென்ம குருவால் தனுசிற்கு பொற்காலம் பிறக்குது !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மகரம் ராசிக்கு விரைய குரு – வருமானத்திற்கு குறைவில்லை !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்கு முயற்சிகளில் வெற்றி – பணமழை பொழியும் !

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மீன ராசிக்காரங்களே அதிர்ஷ்டத்தைப் பாருங்க! ஆடிப்போயிடுவீங்க !

Previous articleகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: புண்ணிய குருவால் சிம்மத்திற்கு பொன்னான நேரம் !
Next articleஇன்றைய ராசிப்பலன் – 01.08.2019 வியாழக்கிழமை !