தென்னையில் ஏற்படும் குரும்பை உதிர்தல் பிரச்சனை!
உங்கள்ளுடைய அனைவர் வீட்டிலும் இந்த பிரச்சனை உண்டா?
குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.
- அதிக கார அல்லது அமில நிலை
- வடிகால் வசதி இல்லாமை
- கடும் வறட்சி
- மரபியல் காரணங்கள்
- ஊட்டச்சத்து குறைபாடு
- மகரந்தச் சேர்க்கை இல்லாமை
- உறார்மேன் குறைபாடு
- பூச்சிகள்
- நோய்கள்
இவற்றை சரிசெய்யும் வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
1) மண்ணின் கார அமிலத்தன்மையை சரிசெய்தல்
மண்ணின் அதிகப்படியான கார அல்லது அமிலத்தன்மை குரும்பை உதிர்வதற்கான காரணமாக இருக்கலாம். மண்ணின் கார அமில நிலை 5.5க்கும் குறைவாக இருப்பது அதிக அமில நிலைக்கான அறிகுறியாகும். இதனை சுண்ணாம்பு சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம். கார அமில நிலை 8.0க்கும் அதிகமாக இருப்பது மண்ணில் அதிகமான காரத்தன்மையைக் குறிக்கும். இதனை ஜிப்சம் சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம்.
2) போதுமான வடிகால் வசதி அமைத்தல்
தென்னை மரங்களில் நீர் வடிகால் வசதி இல்லாவிட்டால், அதன் வேர்கள் காற்றில்லாமல் மூச்சுவிட முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் குரும்பைகள் உதிரும். உரிய இடங்களில் வடிகால் வாய்க்கால்களை அமைத்து மழைக்காலத்தில் எஞ்சிய நீலை வெளியேற்றவேண்டும்.
3) நீர் தேங்கி நிற்கும் இளந்தென்னந்தோப்புகளில் மேலாண்மை
இளந்தென்னங்கன்றுகள் நடப்பட்ட இரு வரிசைகளுக்கிடையே பருவமழை தொடங்கும் பருவத்தில் ஒரு நீண்ட குழி அமைக்கவேண்டும். குழியின் அளவு மூன்று மீட்டர் அகலமும், 30௪5 செ.மீ ஆழமும் உள்ளபடி வயலின் முழு நீளத்திற்கு அமைக்கவேண்டும். இதிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை கன்றுகள் நட்பபட்ட வரிசைகளிலே ஒரு மேடான பாத்தி உருவாகும்படி போடவேண்டும்.
இளங்கன்றுகளை சுற்றிலும் 1.2 மீட்டர் அகலமும் 30௪5 லிட்டர் உயரமும் கொண்ட மணற்குன்றுகளை அமைக்கவேண்டும்.
4) மரபியல் காரணங்கள்
சில மரங்களில் போதுமான உர, நீர், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தபோதிலும் குரும்பை உதிர்வது தொடர்ந்து கொண்டிருக்கும்.இது விதைத் தேங்காய் எடுக்கப்பட்ட விதை மரத்தின் வழியே வந்த குறைபாட்டின் அறிகுறியாகும். ஒன்று போல நல்ல மகசூலை தரும் மரங்கள் கிடைக்க விதைக்காய்களுக்கு தரமான விதை மரத்தை தெரிவு செய்யவேண்டும் என்ற தேவையை இது உணர்த்தும்.
5) ஊட்டசத்து குறைபாடு
முற்றிலுமாகவோ அல்லது போதுமான அளவிலோ உரமிடாலிருப்பதால் குரும்பைகள் உதிரும். பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை குறித்த காலத்தில் இடுவது குரும்பைகள் உதிர்வதைக் குறைப்பதற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. தென்னையில் ஒல்லிக்காய்களை சரிசெய்ய பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடுவதுடன் மரத்திற்கு 2 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் மற்றும் 200 கிராம் போராக்ஸ் கூடுதலாக இடவேண்டும்.
6) மகரந்த சேர்க்கை இல்லாமை
மகரந்து சேர்க்கை இல்லாததாலும் குரும்பைகள் மற்றும் தோப்பில் எக்டருக்கு பதினைந்து என்ற கணக்கில் தேனீ கூடுகளை ஏற்படுத்துவதால் கலப்பின சேர்க்கை அதிகரிக்கும். மேலும் தேனினால் கிடைக்கப்பெறும் கூடுதல் வருவாயினால் குறிப்பிட்ட பரப்பளவிற்குரிய நிகர லாபமும் அதிகரிக்கும்.
7) உறார்மேன் பற்றாக்குறை
இனச்சேர்க்கை முடிந்த நிலையில் உள்ள பெண்பூக்கள், அதாவது குரும்பைகள், சில சமயங்களில் உதிரும். பாளை வெடித்த ஒரு மாதத்தில் மலர் கொத்தின் மீது 30 (அ) 20 (ஒரு லிட்டர் நீரில் 30 அல்லது 20) தெளிப்பதன் மூலம் காய்க்கும் சதவீதத்தை அதிகரிக்கலாம்.
8) பூச்சிகள்
நாவாய்ப்பூச்சி தாக்குவதால் குரும்பைகள் உதிரலாம். இதனை மீதைல் டெமட்டான் 0.025 சதம் (1 மிலி லிட்டர் தண்ணீர்) அல்லது டைமெதோயேட் 0.03 ( 1 மில்லி லிட்டர் தண்ணீர்) சதம் போன்ற ஊடுருவி பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதன் மூலம் குறைக்கலாம்.
9) தென்னை விதை மரத்தை தேர்வு செய்தல் நாற்றாங்கால் மேலாண்மை
தென்னை போன்ற பல வருடப் பயிரில், அதிக மகசூல் தென்னை மரத்திலிருந்து விதைக் காய்களைத் தேர்ந்தெடுப்பதன் அவசியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கீழ்க்கண்ட குறிப்புகளை நினைவில் கொள்க.
தென்னை விதை மரத்தேர்வு
அதிக மகசூல் தரும் மரங்களை பெருமளவில் கொண்டுள்ள, மற்றும் ஒன்றுபோல காய்க்கும் தன்மையுடைய தோப்புகளை விதைக் காய்க்காக தெரிவு செய்யவேண்டும். வீட்டுப்பக்கம் மாட்டுத் தொழுவம், உரக்குழிகளில் மிக நல்ல சூழ்நிலையில் வளரும் மரங்களைத் தவிர்க்கவேண்டும்.
வருடத்திற்கு நூறு காய்களுக்குக் குறையாமல் அதிக மகசூல் கொடுக்கும் மரங்களையே விதைக்காய்களுக்காக தெரிவு செய்யவேண்டும். அடுத்தடுத்து அதிகமாகவும், குறைவாகவும் காய்க்கும் மரங்களைத் தவிர்க்கவேண்டும்.
நடுத்தர வயதுடைய அதாவது 25 முதல் 10 வயதுடைய மரங்களையே தெரிவு செய்யவேண்டும். பதினைந்து வயது மரங்களையும், அவை நிலையான நல்ல மகசூலை தருமாயின் தெரிவு செய்யலாம்.
விதைக்காய் மரங்கள் நேரான தண்டு, அதிகப்படியான இலை மற்றும் பாளை, சிறிய, பருத்த தண்டு, அதிகப்படியான காய்பிடிக்கும் தன்மை (சதவிகிதம்) நடுத்தர காய்கள், அதிக பருப்பு, நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருத்தல்வேண்டும்.
நல்ல, தொடர்ந்து காய்க்கும் ஒரு விதை மரமானது சராசரியாக மாதத்திற்கு ஒரு இலை மற்றும் ஒரு பாளையை, இலையும் தண்டுப்பகுதியும் சேரும் இடத்தில் உற்பத்தி செய்யும் எந்த ஒரு சமயத்திலும் ஒரு மரத்தில் பன்னிரெண்டு குலைகள் பல்வேறு முதிர்ச்சியடைந்த நிலைகளில் காணப்படும்.
நல்ல தரமான கன்றுகள் கிடைக்க விதைக்காய்களை பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் அறுவடை செய்யவேண்டும். அறுவடை செய்யப்படவுள்ள விதைக்காய் குலைகளை ஒரு கயிற்றின் மூலம் கட்டி காய்கள் சேதமடையாதவாறு கீழே இறக்கவேண்டும்.
விதைக்காய்கள் உருண்டை வடிவிலும், விரலால் தட்டினால் உலோக சத்தம் கொடுப்பவைகளாகவும் இருக்கவேண்டும். மகரந்தச் சேர்க்கை முடிந்து 12 மரத்தில் முழுமையாக முற்றிய காய்கள் உருவாகிவிடும்.
நல்ல தரமான கன்றுகளைப் பெறுவதற்கு நெட்டை ம்றறம் வீரிய ஒட்டு இரக விதைக்காய்களை காற்றுபடும்படி ஒர மாதத்திற்கு தொடர்ந்த இரண்டு மாதத்திற்கு மணல் பதனத்திலும் வைத்திருக்கவேண்டும். குட்டை இரகங்கள் ஒரு மாதத்திற்கு குறைவாக காற்றுபடும்படி வைத்தபின் இரண்டு மாதங்கள் மணலில் வைக்கலாம்.
நாற்றாங்கால் மேலாண்மை
நாற்றாங்காலுக்கு தேர்ந்தெடுக்கும் பகுதி நல்ல வடிகால் வசதியுள்ள இடமான இருக்கவேண்டும். நாற்றாங்கால் திறந்த வெளியிலோ அல்லது நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளிலோ அமைக்கவேண்டும்.
விதைக்காய்களை நீளமாக, அகலம் குறைவான பாத்திகளில் ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளிவிட்டு நடவேண்டும். ஒரு வரிசைக்கு ஐம்பது காய்கள் வீதம் நேராகவோ அல்லது சாய்வாகவோ ஒரு பாத்திகளில் ஐந்து வரிசைகள் நடவேண்டும்.
நாற்றாங்கால் பாத்திகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
தென்னை நாற்றாங்காலில் களைகளை கட்டுப்படுத்த சணப்பு இருமுறை பயிரிடுவதும் (ஒவ்வொன்றையும் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யவும்) தொடர்ந்து ஆறாவது மாதத்தில் ஒரு கைக்கிளையெடுப்பதும் மிகவும் உகந்ததாக உள்ளது. அதோடு சணப்பு, வளர்ந்த தென்னை மரங்களுக்கு பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது. பாத்தி ஓரங்களில் அகத்தி அல்லது குபாபுல் ஆகியவற்றை நட்டு நாற்றாங்காலுக்கு நிழல் உண்டாக்கவேண்டும்.
விதைக்காய்கள் நட்ட ஆறு முதல் எட்டு வாரங்களில் முளைக்க ஆரம்பித்து, ஆறு மாதங்கள் வரை முளைப்புத் தன்மை தொடர்கிறது. நட்ட ஐந்து மாதங்களுக்குள் முளைத்த கன்றுகளையே தேர்வு செய்யவேண்டும். முளைக்காத விதைக்காய்களை தோண்டி எடுத்துவிடவேண்டும். நாற்றாங்காலில் பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் கண்காணிக்கவேண்டும்.
நடவுக்குப்பின், ஒன்பது முதல் பன்னிரெண்டு மாதங்கள் ஆன கன்றுகளை தேர்வு செய்யவேண்டும். விரைவில் முளைப்பிற்கு வந்த கன்றுகள், கழுத்துப்பகுதி நன்கு பருமனாக உள்ள கன்றுகள் மற்றும் விரைவில் இலை துணுக்குகள் பிரிந்து கன்றுகளையே தேர்வு செய்யவேண்டும். காக்காய் மூக்கு பிள்ளை கன்றுகளை (அதாவது அப்போது தான் முளைவிட்டுள்ள விதைக்காய்கள்) தேர்வு செய்யக்கூடாது. நாற்றாங்காலிலிருந்து நாற்றுக்களை மண்வெட்டியால் தோண்டி எடுக்கவேண்டும். இலைகளையோ, தண்டையோ பிடித்து நாற்றுக்களை வெளியே இழுக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் தென்னை நாற்றுக்களில் 6 இலைகளும், கழுத்துப்பகுதி சுற்றளவு 10 செ.மீ ஆகவும் இருக்கவேண்டும்.