கர்ப்ப காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஆபத்து வருமா?

0
873

கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து தான் குழந்தையின் உடல் எடை மற்றும் வளர்ச்சி அமையும்.

அதேபோல் கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கர்ப்பக் காலத்தில் குட்டையான பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு?
உயரம் குறைவாக உள்ள பெண்களுக்கு இடுப்பு பகுதியில் உள்ள எலும்பானது சிறியதாகவும், குறுகிய நிலையிலும் இருக்கும். அதனால் அவர்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

கர்ப்ப காலத்தில் அனைவருக்கும் உட்கார்ந்து எழுதல் போன்ற செயல்பாடுகளின் போது மூச்சு திணறல் உண்டாகும்.

அதேபோல குட்டையாக உள்ள பெண்களுக்கும் மூச்சு திணறல் உண்டாகும். ஆனால் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவை?
கர்ப்பக் காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12-16 கி.கி வரை அதிகரிக்க வேண்டும். அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் 7-11 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது. அதோடு உப்பு தூவப்பட்ட நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது கூடாது.
ஒரு சில உணவுகள் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு தடையாக இருக்கும். அதனால் காபி, டீ, சோயா ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் மாதுளை, முட்டை, திராட்சை, மீன், ஸ்ட்ராபெர்ரி, ப்ரோகோலி, ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Previous articleஇலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! முடிவிற்கு வந்தது நெருக்கடி!
Next articleதண்ணீருக்கு மாற்றாக 15 பானங்கள் எடையை குறைக்கும் அதிசயம்!