தங்கள் குழந்தைக்கு வைத்த பெயரை அரச குடும்பத்தினர் காபி அடித்திருப்பதாக ஸ்காட்லாந்தை சேர்ந்த தம்பதியினர் புகார் கூறியுள்ளனர்.
கர்ப்பிணியாக இருந்த பிரித்தானிய இளவரசி மேகன், திங்கட்கிழமையன்று காலை 5.26 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு ‘ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக அரண்மனை நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த டேவிட் அல்லிசன் – டயானா என்கிற தம்பதியினர், அரச குடும்பத்தினர் தங்கள் குழந்தைக்கு வைத்திருந்த பெயரை காபி அடித்து குட்டி இளவரசருக்கு வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குட்டி இளவரசர் பிறந்த அன்றைய தினம் தான் அதிகாலை 1.51 மணிக்கு எங்களுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
எங்களுடைய மகனுக்கு ‘ஆர்ச்சி அலின்சன்’ என அன்றைய தினமே பெயர் வைத்துவிட்டோம். ஆனால் இணையதளவாசிகள் பலரும், நாங்கள் குட்டி இளவரசருக்கு வைத்த பெயரை காபி அடித்திருப்பதாக எங்களை குறை கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
