Home Patti Vaithiyam வயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

வயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

0
1881

குடற் புண் இரைப்பை உணவுக்குழாய்க்குரிய பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும்.

வயிற்றில் ஹைஸ்பைலோரி என்ற பாக்டீரியாக்களால் உருவானால் அல்சர் ஏற்படும் வாய்ப்புண்டு.

மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை குடல் புண்கள் வர முக்கிய காரணங்கள் ஆகும்

சுமார் 4% வயிற்றுப்புண்கள் உயிருக்கு ஆபத்தான கட்டிகளால் ஏற்படுகின்றன.

நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே, வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குமட்டலும் வாந்தியும் போன்றவை இதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.

இந்த பிரச்சினையிலிருந்து விடுபட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள எளிய முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

அகத்திக் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம்,மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம்.

துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்து கடைந்துகொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவதால் அல்சர் மட்டுமல்ல பலப் பிரச்சனைகள் சரியாகும். வியாதிகள் வராமலும் தடுக்கும். இதனை குடித்து 1 மணி நேரத்திற்கு பின் உணவை சாப்பிடுங்கள்.

பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கி சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்துஅப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.

மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும்.
இத்துடன் தேன் கலந்துசாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆறும். அது அல்சரை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை பெற்றது.

ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்குதினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவைதேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், போன்றவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதிலிருந்து தினமும் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் நாளடைவில் அல்சர் குணமாகும்.

மணத்தக்காளியும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது. மணத்தக்காளி கீரையை வாரம் 3 நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கீரை
கிடைக்கவில்லையென்றால் மணத்தக்காளி வற்றலை கடைகளில் வாங்கி அடஹ்னை வற்றல் குழம்பாகவும், பொரித்தும் தினமும் சாப்பிடுங்கள்.

தேங்காய்பாலை தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் வயிற்றில் குளிர்ச்சி ஏற்படுவதுடன், புண்களும் விரைவில் ஆறும். தேங்காயையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பச்சை வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பாதிப்படைந்த மெல்லிய சவ்வுத்தோல்களை மீண்டும் விரைவில் வளரச் செய்யும், புண்களையும் ஆற்றிவிடும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை கொழுந்தை சிறிதளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறுவதுடன், வயிற்று பாதிப்புகளையும் நீக்கும்.

சாதம் வடித்த கஞ்சியில் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டு வாருங்கள். பி காம்ப்ளக்ஸ் சத்து முழுவதும் கிடைக்கும். இதனால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்.

கொத்துமல்லியை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக் ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

பெரும்பாலும் வயிற்றுப் புண்ணில் இருந்தால் இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சாலச்சிறந்தது. மேலும் உணவுகளை

சாப்பிடும்போது, வயிற்றுப்புண் ஆறுவதற்கும், அந்த புண் மேலும் பரவாமல் தடுப்ப‍தற்கும் உகந்த உணவு கள் நமது முன்னோர்கள் கண்டறிந்து நமக்க‍ருளியுள் ள‍னர். அவை யாவன

வீட்டில் செய்யும் இட்லி (கார சட்னி தவிர்த்து), கீரைகள், காய்கறிகள் போன்றவை.

நன்றாக சமைத்து வேக வைத்த சாதம், கஞ்சி, மோர் சாதம் போன்றவை

புளிப்புச்சத்து இல்லாதபழங்கள், ஆப்பிள் சாத்து குடி, பப்பாளிபோன்றவை

பொதுவாக புளிப்புச்சத்தும் காரத் தன்மையும் இல்லாத திரவ உணவுகள் உட்கொள்வது மிக நல்லது.

குறிப்பு

முடிந்தளவு வெளியில் உணவுவிடுதிகளுக்கு சென்று அங்கு ருசிக்காக செய்ய‍ப்படும் உணவுகளை சாப் பிடுவதை முற்றிலும் தவிர்த்து, வீட்டில் நமக்காக வும் நமது ஆரோக்கியத்திற்காகவும் செய்ய‍ப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பெமளவு நோய்கள் தடுக்க‍ப்படும் என்கிறார்கள் உணவி யல் நிபுணர்கள்.

Previous articleஎதற்காக தூங்குகிறோம்? அளவோடு தூங்கி நிறைவோடு வாழுங்கள்!
Next articleநோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம் – 50 மருத்துவ குறிப்புகள்!