வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் இயற்கை மருத்துவம்!

0

புதினா துவையல் வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரணம் குணமாகும்.

அன்னாசிப்பழம் தினம் சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். குடல்புண் குணமாக மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.

அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.

வயிற்றுப் பூச்சிகள் ஒழிய வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை, மாலை 2 வேலை சாப்பிட வயிற்றுப்பூச்சிகள் தொந்தரவு தீரும்.

வயிற்று நோய் குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும். வாயு தொல்லை நீங்க வெள்ளைப்பூண்டை பசும்பாலில் வேகவைத்துச் சாப்பிட குணமாகும்.

அஜீரணம் சரியாக ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.

வயிற்று வலிக்கு கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு பொடி செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 29.4.2018 ஞாயிற்றுக்கிழமை!
Next articleகோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட எலுமிச்சை! அனைவருக்கும் பகிருங்கள்!