எவ்வளவு தான் சாப்பிட்டாலும் எடையே கூடாத 15 உணவுகள் இவை தான் என தெரியுமா?

0

கீட்டோ டயட் என்பது இப்போது பிரபலமாக பின்பற்றப்படும் ஒரு டயட் ஆகும். குறைந்த கார்போ , அதிக கொழுப்பு டயட் ஆகிய இந்த கேட்டோ டயட் சிறந்த ஒரு டயட்டாக பல ஆய்வுகளில் குறிப்பிடப்படுகிறது . எடை குறைப்பு, நீரிழவு மற்றும் எபிலெப்சி போன்ற குறைபாடுகளுக்கு இந்த டயட் நல்ல தீர்வை தருகின்றது.

சில வகை புற்று நோய்க்கும் , அல்சைமர் மற்றும் வேறு நோய்களுக்கும் இந்த டயட் நல்ல நன்மையை தருவதாக ஆதாரங்கள் உள்ளது. இந்த டயட்டில் , ஒரு நாளில் கார்போ உட்கொள்ளல் அளவு 20-50கிராம் மட்டுமே . பல ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகள் இந்த டயட்டிற்குள் எளிதாக அடங்குகின்றன. கீழே 15 வகையான உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை கேட்டோ டயட்டில் அடங்கும் உணவுகள் ஆகும்.

கடல் உணவுகள்

கடல் உணவுகள் பெரும்பாலும் கார்போ சத்து இல்லாத உணாவுகள் தான். அப்படியே இருந்தாலும் மிக குறைந்த அளவு கார்போ தான் இருக்கும். மீன் உணவுகள் வைட்டமின், மினரல் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவற்றின் ஆதாரமாக உள்ளன.

குறைந்த கார்போ காய்கறிகள்

ஒரு கப் குறைந்த கார்போ காய்கறிகளில் 1-8 கிராம் கார்போ சத்துகளே உள்ளன. காய்கறிகள் ஊட்டச்சதுகள் அதிகம் உள்ளவை. மேலும் நோய்கள் வருவதை இவை தடுக்கின்றன.

சீஸ்

சீஸில் புரதம், கால்சியம், மற்றும் நன்மை தரும் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளன. இருந்தாலும் இதில் கார்போ சத்து குறைவாகவே காணப்படுகின்றன.

அவகாடோ

அவகாடோவின் தினசரி அளவு உட்கொள்ளளில் வெறும் 2 கிராம் அளவு கார்போ சத்து மட்டுமே உள்ளது. ஆனால் இதில் நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளது. பொட்டசியம் அதிகமாக உள்ளது. அவகாடோ இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி

ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியில் கார்போ சத்து முற்றிலும் இல்லை. ஆனால் புரதம் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. புற்களை உணவாக கொண்ட ஆடுகளின் இறைச்சிகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

முட்டை

முட்டையில் 1 கிராமை விட குறைந்த அளவு கார்போ சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிற்றை பசிக்காமல் வைத்துக் கொள்ளும். முட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் இருக்கும்.கண்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முட்டை உதவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் கேடொன் உற்பத்தி செய்யும் கூறு அதிகமாக உள்ளது. தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடையை குறைக்கிறது. மேலும் வயிற்றில் உண்டாகும் கொழுப்பை குறைக்கிறது.

க்ரீக் யோகர்ட் மற்றும் சீஸ்

யோகர்ட் மற்றும் சீஸின் தினசரி உட்கொள்ளல் அளவில் 5 கிராம் கார்போ சத்து மட்டுமே உள்ளது. இந்த உணவுகள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வை தருவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

ஆலிவ் எண்ணெய்

சுத்தமான ஆலிவ் எண்ணியில் அன்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது. சாலட் , மயோனிஸ் போன்றவற்றில் இதனை பயன்படுத்துவதும் சமைத்த உணவில் இதனை பயன்படுத்தவும் மிகவும் ஏற்றது.

நட்ஸ்

இதய ஆரோக்கியத்திற்கு நட்ஸ் மிகவும் ஏற்றது. வயது முதிர்விலும் இவை ஆரோக்கியத்தை தருகின்றன. ஒரு அவுன்சில் 0-8 கிராம் அளவு கார்போ சத்து மட்டுமே உள்ளது.

பெர்ரி

பெர்ரி ஊட்டச்சத்துகள் நிறைந்தது. மேலும் நோய்கள் வராமல் தடுக்க இவை பெரிதும் உதவுகின்றன. 3.5அவுன்ஸ் பெர்ரி உட்கொள்வதால் வெறும் 5-12 கிராம் அளவு கார்போ உடலுக்கு கிடைக்கிறது.

பட்டர் மற்றும் க்ரீம்

பட்டர் மற்றும் க்ரீமில் கார்போ சத்து முழுவதுமாக இல்லை. மேலும் இவற்றை மிதமான அளவு உட்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனை தருபவை ஆகும்.

ஆலிவ்

ஆலிவ் , இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. 1 அவுன்ஸ் ஆலிவில் 1 கிராம் அளவ கார்போ சத்து மட்டுமே உள்ளது.

இனிப்பில்லாத டீ மற்றும் காபி

இனிப்பில்லாத டீ மற்றும் காபியில் கார்போ சத்து முற்றிலும் இல்லை. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. இதனால் உடல் மற்றும் மனது புத்துணர்ச்சி அடைகிறது. இனிப்பு சேர்க்கப்படாததால் நீரிழிவிற்கான பயமும் இல்லை.

டார்க் சாக்லேட்

ஒரு அவுன்ஸ் டார்க் சாக்லேட்டில் 3-10 கிராம் அளவு கார்போ சத்து உள்ளது. டார்க் சாக்லெட்டில் அன்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதால் இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article6 நாட்களில் சிறுநீரகத்தில் உள்ள‌ கற்களை முற்றிலும் கரைத்து வெளியேற்றும் அற்புத வழி!
Next articleபொன்சேகா வெளியிட்ட தகவல்! பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எப்படி கொல்லப்பட்டனர்?