Home Rasi Palan ராசி பலன் காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா..!

காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா..!

0
1122

காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா? அல்லது ஒரு காலகட்டத்தில் இந்த உணர்ச்சி ஆட்டுவித்தல் என்பது மேலோங்கி நிற்குமா?

இதுபற்றி ஏற்கனவே நாம் போகஸ்தானம் குறித்துப் பேசியுள்ளோம். பொதுவாக இலக்கியங்களிலெல்லம் குறிப்பிடுவது மாதிரி கண்ணோடு கண் நோக்கினாள் என்று கண்ணைத்தான் முக்கிய காரணமாகச் சொல்வார்கள். சூரியன், சந்திரன் பார்வைக்குரிய கிரகங்கள். ஆனால், காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிரகம் சுக்ரன்தான். இதுதான் பாலியல் இந்த உணர்வுகளுக்கெல்லாம். அடுத்து, புணர்ச்சி, உணர்ச்சி, வேகம், செயல்பாடு இதற்கெல்லாம் உரிய கிரகம் செவ்வாய். எவ்வளவு நேரம், எப்படிப்பட்டது என்பதெல்லாம் நிர்ணயிப்பது செவ்வாய். இப்படி பல கிரகங்கள் அதில் அடங்கிக் கிடக்கிறது.

வாலிபத்தில் இருக்கும் காமம் கூட முறையாக செய்கிறது. ஆனால் வாலிபத்தை தாண்டி தனக்கு பிறந்த பெண்ணோ, பிள்ளையோ மணமுடிக்ககூடிய அளவிற்கு இருக்கும் போது கூட காம உணர்ச்சி அதிகரிப்பது ஏன்?

இதெல்லாம் பார்த்தீர்களானால் யவனம், இளமை, உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது, நரம்புகளைத் தூண்டக்கூடியது புதன். சிலருக்கு காலம் கடந்து கல்யாணம் நடக்கும், சிலருக்கு சீக்கிரம் நடக்கும். அது முக்கியம் கிடையாது. சிலருக்கு 55இல் இருந்து 75 வரை சுக்கிர திசை நடக்கும். அந்த நேரத்தில பார்த்தீர்களானால் காம உணர்ச்சி அதிகமா இருக்கும். முன்பே கூறியபடி, கண் பார்வை சூரியன், சந்திரன். அது பார்க்கும் போதே தூண்டுகிறது. ஆனால், சுக்கிரன்தான் காமத்திற்கு பிரதான கிரகம். அதனாலதான் சுக்கிரனில் இருந்து நீட்சமானாலோ, தவறான கிரகங்களில் சேர்ந்திருந்தாலோ முறையற்ற புணர்வுகளெல்லாம் நிகழும்.

மகாலஷ்மி மாதிரி மனைவி இருந்தும், குரங்கு மாதிரி வைப்பாட்டி வச்சிக்கிறது” இதெல்லாம் வந்து சுக்கிரனோட ராகு, கேது, சனி இதெல்லாம் சேரும் போது, குறிப்பா சுக்கிரனோடு சனி இருந்தால் மாற்றநிலை புணர்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான கிரக சீர்த்திகள் உண்டு. இரண்டு கிரகங்கள் சேரும் போது மட்டுமே இந்த மாதிரி இருக்கமாட்டார்கள். ஏதேனும் ஒரு கிரகத்தின் திசை வரும்போது இந்த மாதிரியான புணர்ச்சி மாறுபாடுகள், தவறுகள் உண்டாகிறது.

ரொம்ப நல்ல மனுஷங்க என் புருஷன், நிமிர்ந்துகூட பார்க்க மாட்டாருங்க. இப்ப இந்த மாதிரி ஆயிட்டாருங்க என்பதெல்லாம் அந்த கிரகத்தோடு திசை அதுவரை வரவில்லை என்று அர்த்தம். அது வந்த உடனே அப்படியே மாறுவார்கள்.

Previous articleஅழகான மலர்களின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
Next articleநுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற! தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க!