அமெரிக்காவில் பிரபல ரிவி நிரூபர் ஒருவர், ”உலக நடிப்புடா எப்ப்பா”… என்று சொல்லக்கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் காமெடி பீஸாகியுள்ளார்.
அமெரிக்காவில் ஃபிளாரன்ஸ் எனும் அசுர புயல் தாக்கியது தெரிஞ்ச விஷயம் தான். இந்த புயலால் கிழக்கு மாகாணங்கள் ரொம்ப பாதிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஒரு அமெரிக்க டிவி நிரூபர் செய்தி அளித்த விதம் பெரிய காமெடியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள வில்மிங்டன் நகரில் ஒரு டிவி நிருபர் லைவ் செய்கிறார்.
மழை கொட்டோ கொட்டு என கொட்டுகிறது. புயல் காற்று சுழட்டி எடுக்கிறது. இதற்கு நடுவில் அந்த நிருபர் தள்ளாடி கொண்டே நிற்கிறார். கமெராவை வேறு பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு பிடித்து கொண்டிருக்கிறார். எந்த நேரம் புயல் தன்னையும் அலேக்காக இழுத்து கொண்டு போய்விடுமோ என்ற பயத்திலேயே செய்திகளை தந்து கொண்டிருக்கிறார்.
கலாய்த்த நெட்டிசன்கள்
ஆனால் அந்த நேரம் பார்த்து, அவருக்கு பின்னால், 2 பேர் அசால்ட்டாக நடந்து போய் கொண்டிருக்கிறார்கள். அதாவது, சாதாரண காற்றில் நின்று கொண்டு புயலுக்கு மத்தியில் செய்தி வாசிப்பது போன்று நடித்துள்ளார் இந்த நிருபர். இக்காட்சியினை அவதானித்த பலரும் கலாய்த்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த நிருபர் புல் தரையில் நின்று கொண்டிருந்ததால் அவரால் நேராக நிற்க முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இதெல்லாம் ஒரு காரணமா என்று விளக்கத்துக்கும் கமெண்ட்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு நிருபர் நடிச்சாலும், மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துவிட்டாரேய்யா!!!




