காமமோகத்தால் கணவனை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொன்ற மனைவி!

0

தமிழ்நாட்டில் வேலூர் அருகே ராணிப்பேட்டையில், கள்ளக் காதலனுடன் கணவனைக் கொன்றதாக மனைவி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த மாட்டு வியாபாரியான அக்பர் என்பவரின் உடல் கடந்தமாதம் 9ம் தேதி வன்னிவேடு அருகே கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பொலிசார் நடத்திய விசாரணையில் அக்பரின் மனைவி ரிகானா பேகமுக்கு காலித் அகமது என்பவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ரிகானா பேகத்தை அக்பர் கண்டித்ததால் அவர் தமது ஆண் நண்பரான காலித் அகமது மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து சடலத்தை காட்டுப் பகுதியில் வீசியெறிந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ரிகானா உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரிகானாவின் காதலன் காலித் அகமது உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Previous articleவிசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த தயாராகும் பொலிஸ் மா அதிபர்!
Next articleபிக்பாஸ் ரித்விகா பரிசாக பெற்ற பணத்தை என்ன செய்தார் தெரியுமா?