காண்டம் அணியும்போது இதை கவனத்தில் வைக்கவும் இல்லை பதிப்பு உண்டாகும்!

0

ஆண்களுக்கான ஆணுறையைப் பற்றி பெரும்பாலானோருக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆனால் பெண்களுக்கான ஆணுறைகள் பயன்படுத்துவுது பற்றியும் அதில் உள்ள பாதுகாப்பு முறைகள், பயன்படுத்தும் முறைகள் ஆகியவை பற்றி நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அது பற்றி நிறைய குழப்பங்கள் இருக்கின்றன.

அதனால் உறவில் ஈடுபடும் ஆண் மட்டும் ஆணுறையைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் காண்டமை பயன்படுத்துவதில்லை. ஆனால் பெண்களும் காண்டமை அவசியம் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் முன் அதுபற்றிய சில முக்கிய

பெண்கள் காண்டம்
ஒவ்வொரு வருடமும் காண்டமைப் பயன்படுத்துகிற 100 பெண்களில் 20 பெண்கள் காண்டம் பயன்படுத்திய பின்னும் கர்ப்பம் தரிப்பதுண்டு. அப்படி இருந்தும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். கர்ப்பம் உண்டானதற்கு முறையாக, சரியான காண்டமை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது என எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அதைவிட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பாலியல் நோய்களில் இருந்து காப்பாற்றும். இதோடு பெண்கள் காண்டம் பயன்படுத்துவதற்கு முன்பாக, கவனிக்க சில விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

விந்து சேகரிப்பு
பெண்கள் பயன்படுத்தும் காண்டமின் உள்ளே விந்து சேகரிக்கப்படும். ஆனால் அது பெண்ணின் பிறப்புறுப்புக்கு வெளிப்பகுதியிலேயே இருக்கும். பெண்களின் காண்டமில் இரண்டு புறமும் ஒரு திக்கான வளையப் பகுதி இருக்கும். அதில் ஒரு முனை பொருத்தப்பட்ட காணடம் சரியாக ஒரே இடத்தில் நகரமாமல் இருப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

எவ்வளவு பாதுகாப்பானது
பொதுவாக பெண்களுக்கான காண்டம் 75 முதல் 82 சதவீதம் வரை சிறப்பாகச் செயல்படும். அதுவே எல்லா முறையும் காண்டம் பயன்படுத்துதல், சரியாகப் பொருத்துதல் என எல்லாவற்றையும் கவனமாகக் கையாண்டால் அது 95 சதவீதம் வரை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் செயல்படக் கூடியது.

எப்போது பொருத்த வேண்டும்?
பெண்கள் காண்டம் பொருத்தப்பட்டு எட்டு மணி நேரத்திற்குள் உறவு கொள்ளலாம். ஒவ்வொரு முறை அடுத்தடுத்து உறவு கொள்ளும்போது, ஒரு புதிய காண்டமை மாற்றிக் கொள்ளலாம். மாதவிடாய், கர்ப்ப காலம், சமீபமாக குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் கூட இந்த பெண்கள் காண்டமைப் பயன்படுத்தலாம்.

பிறப்புறுப்பு அரிப்பு
பெண்கள் காண்டம் பயன்படுத்தும்போது பிறப்புறுப்பில் அரிப்போ, அல்லது ஆண்களின் பிறப்புறுப்பில் அரிப்போ ஏற்பட்டாலும், அதேபோல, இன்பம் குறைவது போல் தோன்றினாலும், அதற்குக் காரணம் காண்டம் சரியாகப் பெண்ணுறுப்பில் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

எதை எங்கு வாங்க வேண்டும்?
பெண்களுடைய காண்டம் பொதுவாக நைட்ரைல் எ்னனும் சிந்தடிக் ரப்பர் வகையினால் ஆனது. இதில் செய்யப்பட்டது தான் பாலியல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். இது பொதுவாக எல்லா மருந்து கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும்.

மருந்து சீட்டு
மற்ற மருந்துகள் வாங்குவதைப் போன்று பெண்கள் காண்டம் வாங்குவதற்கும் மருத்துவப் பரிந்துரை சீட்டு தேவையா என்று கேட்டால், அது தேவையில்லை. யார் வேண்டுமானாலும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

உடைந்துவிட்டால்
பெண்களுக்கான காண்டம் பொதுவாக இரண்டு வகையான லூப்ரிகேட்களால் ஆனது. ஒன்று எண்ணெய் போன்று வழவழப்பான தண்மையும் மற்றொன்று தண்ணீர் போன்ற இதமான தன்மையும் கொண்டிருக்கும். இதில் எதுலாக இருந்தாலும் ஆண்களின் ஆணுறையைப் போன்றே உறவின் போது கிழியும் வாய்ப்புகளும் உண்டு. அப்படி ஒருவேளை உறவின்போது, காண்டம் கிழிந்தாலோ, கசிந்தாலோ உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இப்படி நடந்து ஐந்து நாட்களுக்கு உள்ளாக கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லது.

கஷ்டமா?
பெண்கள் காண்டம் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பான ஒன்று. அதேபோல் பயன்படுத்துவதும் மிக எளிதான விஷயமாகத் தான் இருக்கும்.

பக்க விளைவுகள்
கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தும் போது உண்டாகும் பக்க விளைவுகள் இந்த காண்டம் பயன்படுத்துவதால் ஏற்படுவதில்லை. இயற்கையான ஹார்மோன் பாதிப்புகளும் இதனால் உண்டாகாது. கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தினாலும் கூடவே காண்டமையும் சேர்த்துப் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பானது.

இப்போது உங்களுடைய குழப்பங்கள் ஓளரளவுக்கு தீர்ந்து போயிருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை தான்.
Next articleஇன்றைய ராசிப்பலன் – 12.06.2019 இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை!