முன்னணி நட்சத்திர வசூல் நாயகர்களுடன் நாயகியாக இன்னமும் ஜோடி போட்டு நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். 30 வயதை கடந்தும் இன்னமும் திருமணம் எனும் எண்ணத்தை தள்ளிவைத்து நடிப்பில் அக்கறை காட்டிக்கொண்டிருக்கின்றார் இவர்.
34 வயதை அடைந்தும் கதாநாயகியாகவே வலம் வரும் காஜல், தனது அழகையும், உடல் தோற்றத்தையும் சிறந்தமுறையில் எல்லோரையும் கவரும் வண்ணம் பராமரித்து, ‘ஸ்லிம்’ ஆனா தோற்றத்தில் மிளிர்வதோடு இன்னும் பல படங்களை தன் வசமாக்கும் முயற்சியில் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. இதனால், உங்கள் திருமணம் எப்போது….? என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ளாத தவறுவதில்லை, காஜல் அகர்வால். இந்தக் கேள்வி எழுவதற்கு, காஜல் அகர்வாலின் தங்கைக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளமை ஒரு காரணம் எனலாம்.

இந்த நிலையில், டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் தனது பிரத்தியேக பக்கத்தினூடாக, அண்மையில் தனது ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருந்தார் காஜல் அகர்வால். அப்போது, ரசிகர் ஒருவரால், “திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா…..? என்று காஜலிடம் கேள்வியெழுப்பப்பட்டபோது, திருமண உறவின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நானும் திருமணம் செய்ய தயாராகவே இருக்கிறேன். நேரம் வரும்போது அதுபற்றி அறிவிப்பேன்” என்று பதிலளித்தார் காஜல்.
இன்னுமொருரசிகரிடமிருந்து, “என்னைநீங்கள்திருமணம்செய்துகொள்வீர்களா…? என்றகேள்விஎழுந்தது. அதற்குஎந்தவிதகுழப்பமும்இல்லாமல்பதிலளித்தகாஜல், கொஞ்சம்முயற்சிசெய்துபார்க்கலாமே.
இருந்தாலும் அது அவ்வளவு சுலபமாக அமையும் விஷயமல்ல” என கூறியுள்ளார்.
இது இப்படியிருக்க, திருமணம் குறித்த நம்பிக்கை தொடர்பில் காஜல் குறிப்பிட்ட கருத்தை முன்வைத்து, வெகு விரைவில் நடிகை காஜல் அகர்வாலின் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று சிலர் ஆரூடம் கூற ஆரம்பித்துள்ளனர்.




