கழுத்திலுள்ள கருமை தோற்றத்தை ஒரே வாரத்தில் போக்கும் பொருட்கள்!

0

 சிலரது முகம் அழகாக இருந்தாலும் கழுத்தில் கருமை படந்திருக்கும், எளிதில் சூரிய ஒளி புகுந்துவிடும் பகுதி. இதனால் விரைவில் கருமையும் ஏற்பட்டுவிடும்.

கழுத்திலுள்ள கருமை தோற்றத்தை போக்க வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு சுலபமாக போக்கிடலாம். எப்படியென பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் சாறு : வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுங்கள். அதனை கழுத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவவும். வெள்ளரிக்காய் கருமையை போக்கி, சருமத்திற்கு நிறமளிக்கும்.

மஞ்சள்  :  சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து இதை கழுத்து கருமை பகுதியில் அப்ளை செய்தால் விரைவான பலன் கிடைக்கும்.

யோகட் : யோக்கட்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் தன்மை கொண்டது இதனால் சருமத்திலுள்ள இறந்த செல்களை வெளியேற்றும். தினமும் காலை, மாலை யோக்கட்டை தடவி ,காய்ந்த்தும் கழிவினால் ஒரே வாரத்தில் கருமை மறைந்துவிடும்.

பாதாம் : பாதாமை ஊற வைத்து அரைத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் 1ஸ்பூன் பால் கலந்து கழுத்தில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்தால் கருமை மறைந்துவிடும்.

சமையல் சோடா : சமையல் சோடா சிறந்த அழுக்கு நீக்கி. கழுத்தில் வியர்வை மற்றும் கிருமிகளால் உண்டாகும் தழும்புகளை மறைத்து சருமத்திற்கு நிறமளிக்கும். சமையல் சோடாவை நீரில் பேஸ்ட் போலச் செய்து கழுத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் கருமை நிறம் மறையும்.

கடலை மாவு மற்றும் பால் : பால் கால் கப் எடுத்து அதனுடன் 2 ஸ்பூன் கடலை மாவு கலந்து கழித்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். தேவையென்றால் சிறிது மஞ்சள் பொடியும் கலந்தால் கழுத்து மின்னும்.

தக்காளி : தக்காளியை நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும்.இந்த கலவையினை தினமும் போட்டால், சில வாரங்களில் கழுத்துக் கருமை சரியாகும்.

By : Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவழிபாடு முடிந்ததும் கோயிலில் அமர்வது ஏன்?
Next articleசெல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம் கடைபிடிப்பது எப்படி?