கழிவுகளை நீக்கி குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள, இத தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க!

0
645

மலச்சிக்கல் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம், வயது, மருந்துகள், குறிப்பிட்ட வைட்டமின்கள், போதிய நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இல்லாமை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆனால், இந்த மலச்சிக்கல் பல நாட்களாக நீடித்திருந்தால், அது உடலில் உள்ள வேறொரு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்த நிலையில் உடனே மருத்துவரை அணுகி, அதற்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இங்கு இந்த குடலை அவ்வப்போது சுத்தம் செய்து, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் ஓர் அற்புத ஜாம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மலச்சிக்கல்
நம்மில் பலர் மாதத்திற்கு ஒருமுறையாவது மலச்சிக்கல் பிரச்சனையால் கட்டாயம் அவஸ்தைப்படுவோம். இந்த நேரத்தில் இப்பிரச்சனையைப் போக்க நாம் வாழைப்பழம் போன்ற பல மலமிளக்கும் உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடுவோம். இருப்பினும் சிலருக்கு அது பலனை அளிக்காது.

நேச்சுரல் ஜாம்
ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஓர் சுவையான ஜாம் மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கும். முக்கியமாக இந்த ஜாம் எவ்வளவு தீவிரமான மலச்சிக்கலையும் உடனடியாக சரிசெய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏன், மருத்துவர்கள் கூட இதை மலச்சிக்கலுக்கான மருந்தாக பரிந்துரைக்கின்றனர்.

ஜாம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
பேரிச்சம் பழம் – 150 கிராம் (1 கப்)

உலர்ந்த முந்திரி பழம் – 150 கிராம் (1 கப்)

நீர் – 5 கப்

தயாரிக்கும் முறை
முதலில் பேரிச்சம் பழம் மற்றும் உலர் முந்திரி பழங்களை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் துண்டுகளாக்கி வைக்கப்பட்டுள்ள பழங்களை சேர்த்து, கலவை ஜாம் போன்று கெட்டியாகும் வரை நன்கு வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது ஜாம் தயார்!

எப்போது சாப்பிடுவது நல்லது
இந்த ஜாமை காலை உணவின் போது 1 டேபிள் ஸ்பூன் சாப்பிட, குடலியக்கம் சீராகி, குடலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகள் முறையாக உடலில் இருந்து வெளியேறிவிடும்.

உலர்ந்த முந்திரிப்பழம்
உலர்ந்த முந்திரிப் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதே சமயம் அதில் சார்பிடோல் என்னும் மலமிளக்கும் சர்க்கரையும் உள்ளது.

வேறு வழி
இரவில் படுக்கும் சிறிது உலர் முந்திரிப் பழங்களை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரையும், உலர் முந்திரிப்பழத்தையும் சாப்பிட, குடலியக்கம் சீராக செயல்படும். ஆனால் இச்செயலை தினமும் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால், அது தீவிர வயிற்றுப் போக்கி உண்டாக்கிவிடும்.

Previous articleரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரிப்பது எதன் அறிகுறிகள் என தெரியுமா உங்களுக்கு!
Next articleநல்ல உடல் மற்றும் மனநலத்துடன் எளிதாக ஆழ்ந்த உறக்கம் பெற பைபாசிக் முறை ட்ரை பண்ணுங்க!