கலவியில் ர்டுபடுதலில் GGG என்று குறிப்பிடப்படுவது என்னவென்று தெரியுமா?

0

இல்லற வாழ்க்கையின் அடிப்படை தாம்பத்தியம். மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் கூட உடலுறவு என்பது கட்டாயம் தேவைப்படுகிறது. உடலுறவு என்பது உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தவும், இலகுவாக உணர செய்யவும் கூட உதவுகிறது. ஆனால், அது இருவரும் விரும்பி ஈடுபடும் உறவாக இருக்க வேண்டும்.

கட்டாயப்படுத்தி அல்லது பலவந்தமாக ஒருவருடன் உடலுறவில் ஈடுபடுவது குற்றச்செயல் ஆகும். உடலுறவில் இவ்வாறு ஈடுபட்டால் ஆண்களுக்கு பிடிக்கும், அதுப் போன்ற செயல்கள் தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று சில உடலுறவு கட்டுரையாளர்கள் கூறுவதுண்டு. ஆனால், சமீபத்தில் ஓர் ஆய்வின் மூலமாக தம்பதிகள் “GGG” எனும் முறையில் உறவில் ஈடுபட்டால் இல்லறம் சிறக்கும் என கூறியுள்ளனர்…

“GGG”
ஐந்து வருடங்களுக்கு முன்பு டான் சாவேஜ் எனும் உடலுறவு கட்டுரையாளர் தான் இந்த GGG என்பதை பற்றி முதன் முதலில் கூறினார். GGG என்பது Good, Giving மற்றும் Gaming என்பதை குறிக்கிறது.

குட் (Good)

முதல் “G” ஆன குட் குறிப்பது, படுக்கையில் சிறந்து செயல்பட வேண்டும். சிறந்து என்பது வேகத்தை குறிப்பது அல்ல, நீங்கள் ஈடுபடும் முறையை குறிப்பது.

கிவ்விங் (Giving)

Giving equal time… உங்கள் துணைக்கும் அவருக்கான நேரம் மற்றும் இன்பம் அடையும் வரையிலான நேரத்தை தர வேண்டும். ஒருதலைப்பட்சமான செயல்பாடு இருக்க கூடாது என்று குறிப்பிடப்படுகிறது.

கேம் (Game)

உடலுறவில் ஈடுபடும் முன்னரும், பின்னரும் விளையாடுதல் இருக்க வேண்டும். கொஞ்சி விளையாடுதல் என்பது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நிறைய நன்மைகளை தருகிறது என உடலுறவு கட்டுரையாளர் டான் சாவேஜ் கூறுகிறார்.

அரிசோனா பல்கலைக்கழகம் மற்றும் ஹனோவர் கல்லூரி இணைந்து இந்த GGG எவ்வாறு உடலுறவு வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை பற்றி ஓர் ஆய்வினை நடத்தினர்.

இந்த ஆய்வில் 96 தம்பதிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்டளிடம், இந்த GGG முறையை பின்பற்றும்படியும், இதன் பிறகு எதுப்போன்ற முன்னேற்றங்கள் தெரிகிறது, உறவில் ஈடுபட ஆர்வம் அதிகரிக்கிறதா என்பது போன்ற கேள்விகள் கேட்டு ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டது.

தம்பதியர் பலரும் அவர்களது உறவில் மாற்றங்கள் உணர்ந்ததாகவும். அவர்கள் மத்தியில் அடிக்கடி கட்டிப்பிடித்துக் கொள்வது, முத்தமிட்டுக் கொள்வது, கொஞ்சிக் கொள்வது அதிகமாகி இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் தங்களது உடலுறவு நடத்தையிலும் மாற்றம் உணர்ந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? வேப்ப எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க !
Next articleபகல் நேரத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்பவரா நீங்கள்? கட்டாயம் இதை படிங்க!