தான் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த பெண் 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பெற்றெடுப்பது பெண்கள் அனைவருக்கும் அமைந்த ஒரு வர பிரசாதம் என்று கூறினால் அது மிகையாகாது.
தனது கருவில் தன்னுடைய வாரிசை 9 மாதம் சுமந்து பெற்றெடுக்கும் போது தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள் என்பதை அனைவரும் கூற கேட்டிருப்போம்.
அது போய் இல்லை உண்மை என்பதை அனைவரும் உணர்வோம். அதிலும், அதிலும் சிலருக்கு குறை பிரசவத்திலும் குழந்தை பிறக்கும்.
அதாவது, கர்ப்பமான ஏழு மாதத்திலோ அல்லது எட்டாவது மாதத்திலும் குழந்தை பிறக்கும்.
இந்நிலையில், ஒரு பெண் தான் கற்பமாக இருப்பதை கண்டறிந்த 45 நிமிடங்கலிலேயே ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை சேர்ந்த 19 வயதுடைய பெண் எம்முலீஸ். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், அவரும் அவரது கணவரும் தற்போது இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என திட்டமிட்டனர். அதனால் எம்முலீஸ் சரியான நேரத்தில் கருத்தடை மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் காலையில் அவர் எழும் போது அவரது வயிறு பெரியதாக இருந்துள்ளது. மேலும் வயிறும் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் தனது தாயை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
இதையடுத்து, அவரை காண அவரது தாயையும், பாட்டியும் வந்த நிலையில் இது பிரசவ வலி என பாட்டி புரிந்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தான் கர்ப்பமாக இருப்பதாக எம்முலீஸ் உணர்ந்து 45 நிமிடத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அதற்கு முந்தைய நாள் வரை தான் கர்ப்பமாக இருப்பது அவருக்கே தெரியாது. கடந்த சில மாதங்களாக தனக்கு உடல் எடை அதிகமாகி கொண்டு போவதாக அவர் உணர்ந்துள்ளார்.
அதை தனது தாயிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது தாய் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். இருந்தாலும் உடல் எடை கூடுவதை தடுக்க முடியவில்லை.
அதுமட்டும் இன்றி அவர் கர்ப்பமாக இருக்கும் போது வயிறும் பெரியதாக இல்லை. அதனால் அவர் எந்த விதமான கர்ப்பதரித்தற்கான சோதனையும் செய்யவில்லை.
மேலும், கர்ப்பகாலத்தில் வரும் மசக்கை உணர்வும் அவருக்கு ஏற்படவில்லை. இது எப்படி நடந்தது என எம்முலீஸிற்கே ஆச்சரியமாக இருந்துள்ளது.
தான் கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதால் தனக்கு மாதவிடாய் விரவில்லை என எம்முலீஸ் கருதி கொண்டு அது குறித்து கவலைப்படாமல் இருந்துள்ளார்.
தான் கர்ப்பமாக இருக்கிறோம் என தெரியாமல் ஒரு பெண்ணிற்கு திடீர் என குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ”கர்ப்பபையின் பின்பக்கம் கீழ் பக்கமாக கரு உருவாகியிருக்கலாம் அதனால் தான் வயறு பெரியதாக தெரியவில்லை.
குழந்தை பிறக்கும் தருவாயில் முன் பக்கம் வந்ததால் அவரக்கு காலையில் வயிறு பெரியதாகியுள்ளது. இது சாதாரண விஷயம் தான் என கூறினார்.