கர்ப்பம் தரிக்க நினைப்பவர்களும் அல்லது அதை தள்ளிப்போட நினைப்பவர்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடையங்கள்!
பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் பிள்ளைப்பேற்றில் பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிற முக்கியமான விடயமாக பெண் மற்றும் ஆணின் வயது மிகப் பிரதானமான பங்காற்றுகின்றது என்பது உண்மையானால் பெண்கள் கர்ப்பம் தரிக்க சரியான வயது தான் என்ன? என்பது ஒரு கடினமான கேள்வியாக காணப்படுகின்றது. இவ்வாறாக கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயதாக 22 முதல் 26 வயது கொள்ளப்படுகின்ற போதிலும், இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகின்றது.
அவ்வாறானால் நான் இந்த வயதுகளில் இல்லை என்றால் எனக்கு குழந்தை பிறக்காதா? என்று கவலையுடன் நீங்கள் கேட்பது எனக்கு புரிகின்றது அது அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும் என பலதரப்பட்ட ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன.
அத்தகைய சில புள்ளி விவரங்களைப் நோக்கின்,
பொதுவாக பெண்கள் 30 வயதினில், 75 சதவீதமான பெண்கள் ஒரு வருடங்களிலும், 91 சதவீதமான பெண்கள் நான்கு வருடங்களிலும்; கர்ப்பமடைந்து விடுவதுடன்,
35 வயதினில், 66 சதவீதமான பெண்கள் ஒரு வருடத்திலும், 84 சதவீதமான பெண்கள் நான்கு வருடங்களிலும்; கர்ப்பமடைந்து விடுகின்ற அதேவேளை,
40 வயதினில், 44 சதவீதமான பெண்கள் ஒரு வருடங்களிலும், 64 சதவீதமான பெண்கள் நான்கு வருடங்களிலும்; கர்ப்பமடைகின்றார்கள்.
இவ்வாறாக, இவை பொதுவாக பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு பற்றியது தானே தவிர, குழந்தைகள் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்பது பற்றி சொல்ல முடியாது.
கர்ப்பம் தரிப்பதில் ஆண்களின் வயதின் முக்கியத்துவம்
பெண்ணின் வயது அளவுக்கு ஆண்களின் வயது அந்களவிற்கு முக்கியமான காரணியாக கருதப்படுவதில்லை. பொதுவாக பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப் படுவதுடன், இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும் அதேவேளை, ஆண்களுக்கு விந்துக்கள் தினமும் உருவாகுகின்றன. எனினும், ஆண்களிற்கு விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, வயதாக, குறைவடையும். இவ்வாறாக ஆண்கள் பற்றிய சில புள்ளி விபரங்களின் படி,
பொதுவாக 20 முதல் 39 வயதிற்கு இடையிலான ஆண்களில்;, 90 சதவீதமானோர்க்கும், 40 முதல் 69 வயதிற்கு இடையிலான ஆண்களில்;, 50 சதவீதமானோர்க்கும், 80 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில்;, 10 சதவீதமானோர்க்கும், ஆரோக்கியமான வி ந் து உற்பத்தியாகுகின்றது.
கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டியவை
கற்பம் தரிக்க முயலும் பெண்கள் தாங்கள் உ ட லு ற வில் ஈடுபடுகின்ற நாளினை கவ னத்திற் கொள்வது முக்கியமானது. பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இது முட்டை வெளியீடு என்று அழைக்கின்றதுடன், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation) என்றும் பெயர் வழங்கப்படுகின்றது.
இவ்வாறு கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18 முதல் 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டியது அவசியமாகின்றதனால், இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருத்தல் அவசியமாகின்றது. இவ்வாறாக ஒரு ஆணின் விந்து (sperm) சராசரியாக 3 முதல் 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும் என்பது கவனிக்கத் தக்கது.
உ (ட லு) ற வு கொள்ள சரியான கால கட்டம்
ஒவுலஷன் (Ovulation) அதாவது உங்கள் முட்டை வெளி வரும் காலத்திற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உ (ட லு) றவு கொள்வது மிகுந்த பயனளிக்கும். இங்கு ஒருவருக்கு முட்டை வெளியீடு (Ovulation) காலம் இடம்பெறுகின்றது என்பதனை எவ்வாறு தெரிந்து கொள்வது? என்பதில் உங்களிடையே பலத்த சந்தேகம் இருப்பது புரிகின்றது. இந்த நாட்களில் உங்களுக்கு உடலில் ஏற்படக் கூடிய பலவிதமான மாற்றங்களினைக் கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது,
உங்களுக்கு மாத விலக்கு மிகவும் சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் இடம்பெறின், உங்கள் முட்டை வெளியீடு (Ovulation) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். மாறாக உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை இம்பெறவில்லை என்றால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் இடம்பெறும். உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 – 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளியீட்டு நாள்.
மேலும், உங்கள் பெண்ணுறுப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் காணப்படுதல். மற்றும்; உங்கள் மார்பகங்கள் மென்மையாகுதல், வயிறு பிடித்துக் கொள்ளுதல் (belly cramps), கா ம வே ட் கை அதிகரித்தல், இரத்தச் சொட்டுக்கறை (spotting) மற்றும் உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றுதல். இது தவிர, ovulation testing kits போன்ற பொருட்கள் உங்கள் சிறு நீரில் உள்ள ஹார்மோன் அளவினை அடிப்படையாகக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லி விடும்.
இன்னும், முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடலின் வெப்பநிலை 0.4�கு – 0.8�கு அதிகமாகும் என்பதனால், உங்களிடமுள்ள டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer) மூலம் உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். இத்தகைய வெப்பநிலை அளவீடுகளை கீழுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிம்.
கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை
உ ட (லு ற) வின் போது ஓரளவு ஆபத்து குறைவான குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தவிர ஏனைய எண்ணெய், எச்சில் மற்றும் ஜெல் போன்றவை பயன்படுத்தும் போது அவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியனவக உள்ளதனால், முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களையும் உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.
மேலும், பெண்கள் உ (ட லு ற) வி ன் பின்னர் தமது பெ ண் கு றி யை பலவிதமான திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடித்து Vaginal Douche என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சுத்தம் செய்கின்ற போது இத்தகைய திரவங்கள் வி ந் து வை க் கொல்வதுடன், பெ ண் ணு று ப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கின்றன என்பது எம்மில் பலர் அறியாத விடயமாக உள்ளது. இந்தவகையில், இத்தகைய முறையில் உ (ட லு) ற வு கொண்டால், கர்பமடைவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றன என்பதற்கான அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை. வழக்கமான உ ட லு ற வு நிலை, அதாவது, ஆண் மேலே படுத்து பெண் கீழே படுத்து உ ட ல் உ (ற) வு கொண்டாலே போதுமானது.
பின்குறிப்பு:
கர்ப்பம் தரிப்பது சற்று பயமாக தோன்றுகின்ற போதிலும் கர்ப்ப காலம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம் என்பதனை மனத்திற் கொண்டு இங்கே தரப்பட்டுள்ள பட்டியலையும், நாள்காட்டியையும் உபயோகித்து உங்கள் மாதவிடாயையும், முட்டை வெளியீட்டையும் கணக்கெடுத்து கொள்வதுடன், கருத்தடை சாதனங்களை பணன்படுத்துவதனை நிறுத்மி விடுவதுடன், கருத்தடை மாத்திரைகளோ, அல்லது காப்பர் டி (Copper-T) போன்றவை உபயோகித்தால், ஒரு நல்ல மருத்துவரை அணுகி எவ்வளவு நாட்கள் கழித்து கருப்பிடிக்கலாம் என்று கலந்து ஆலோசிப்பதுடன், சீரான மாதவிடாய் வரும் வரை காத்திருந்து, அதன் பின்னர்; கருத்தரிக்க முயலுங்கள்.
By: Tamilpiththan