கருப்பு திராட்சை பழத்தில் உள்ள புரோ ஆன்தோ சயனிடின் அதன் விதைகளிலும் ஏராளமாக நிறைந்துள்ளது.
மேலும் இது விட்டமின் சத்துகளையும் அதிகளவில் கொண்டுள்ளது, இது மட்டுமில்லாமல் மருத்துவ பலன்களையும் அதிகமாக பெற்றுள்ளது.
கருப்பு திராட்சை விதைகளின் நன்மைகள்
திராட்சை விதையில் உள்ள உட் கூறு, புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டுள்ளது.
ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழத்தின் விதை குறைக்கிறது.
புண்கள் மற்றும் காயங்களை விரைவில் குணமாக்க உதவுகிறது.
மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப்படுத்துகிறது.
ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கரைத்து ரத்தோட்டத்தை சீராக்குகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
சிறுநீரகக் செயல்பாட்டின் குறைபாடுகளை சரிசெய்து, மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது.
பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பைல் கோளாறுகள் போன்ற நோய்களில் இருந்து தடுக்கிறது.
ஆண்களுக்கு வயதான காலத்தில் வரும் புராஸ்டேட் புற்றுநோயை வராமல் தடுக்கிறது.




