Home Patti Vaithiyam கருநாகத்தின் விஷத்தினை முறிக்கும் ஆற்றல் கொண்ட ”தவசு முருங்கை”!

கருநாகத்தின் விஷத்தினை முறிக்கும் ஆற்றல் கொண்ட ”தவசு முருங்கை”!

0
665

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தவசு முருங்கை, ஆஸ்துமாவை கட்டுப்படுத்தகூடியது.

இது தும்பை பூவை போன்ற உருவமுடைய பூக்களை உடையது, இதற்கு புன்னாக்கு பூண்டு என்ற பெயரும் உண்டு.

கருநாகம் போன்ற பாம்பு கடிக்கு அற்புதமான மருந்தாகி விஷத்தை போக்குகிறது, தோல்நோய்களை குணப்படுத்துகிறது.

தவசு முருங்கை இலையை பயன்படுத்தி சளி, இருமல், மூச்சிரைப்பை போக்கலாம்.

சுக்குப்பொடி மற்றும் தவசு முருங்கை இலை சாறு குடித்துவர சளி, இருமல், மூச்சிரைப்பு பிரச்னைகள் சரியாகும்.

சுவாசபாதையில் ஏற்படும் அடைப்பை போக்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

துளசியை போன்ற அமைப்பை உடைய தவசு முருங்கையை கொண்டு கல் போன்ற கட்டிகளை கரைக்கலாம்.

தவசு முருங்கை இலை, விளக்கெண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வதக்கவும்.

இதை கட்டிகளுக்கு மேல்பற்றாக போடும்போது கட்டிகள் கரைந்து போகும். வீக்கம், வலி மறையும். புண்கள் ஆறும்.

Previous articleபைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்க!
Next articleவாசமில்லாத வாடாமல்லி பூவின் அற்புத மருத்துவ பயன்கள்!