Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal கப்பலுக்குள் நடந்த மரண போராட்டம்! உயிர் தப்பிய தம்பதிகளின் பதில்! டைட்டானிக் சம்பவத்தை நினைவுப்படுத்தியதா!

கப்பலுக்குள் நடந்த மரண போராட்டம்! உயிர் தப்பிய தம்பதிகளின் பதில்! டைட்டானிக் சம்பவத்தை நினைவுப்படுத்தியதா!

0
662

நோர்வேயில் புயல் தாக்கியதில் இயந்திரம் பழுதாகி கடலில் நிறுத்தப்பட்டிருந்த வைகிங் ஸ்கை என்ற சொகுசுக் கப்பல் பத்திரமாக துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வைகிங் ஸ்கை என்ற பெயர் கொண்ட சொகுசு கப்பல் 1,300 பயணிகளுடன் நோர்வேயில் இருந்து புறப்பட்ட இடத்தில் இருந்து 38 நாட் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது திடீரென வீசிய சூறாவளி காற்றிலும், பேரலையிலும் சிக்கி தள்ளாடியது.

இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மற்றும் மீன்பிடிப் படகுகள் மூலம் கப்பலில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடல் சீற்றம் குறைந்ததைத் தொடர்ந்து இழுவைக் கப்பல் மூலம் வைகிங் ஸ்கை கப்பல் மோல்டே என்ற துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சொகுசு கப்பலில் பயணம் செய்த அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர், தாங்கள் எதிர்கொண்ட திகில் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

12 நாட்கள் சொகுசு பயணமாக புறப்பட்ட இந்த கப்பலில் நாங்களும் இருந்தோம். கப்பல் நோர்வே கடலை சுற்றிக்கொண்டிருந்தபோது அது மூழ்கிவிடுமோ என நாங்கள் அஞ்சினோம்.

இது டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவத்தை நினைவுபடுத்தியது. கடல் சீற்றத்தில் எழுந்த அலையின் காரணமாக பொருட்கள் தூக்கியெறியப்பட்டன. கப்பலில் இருந்த உணவகத்தின் வழியாக தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது.

கதிரைகள் தூக்கியெறியப்பட்டதால் எனது மனைவி காயமடைந்தாள். எங்கள் கால்களில் பட்டு காயம் ஏற்பட்டதையடுத்து கப்பலில் இருந்து மீட்கப்பட்ட முதல் பயணிகள் நாங்கள் தான்.

இதில், உயிர்தப்பியது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. எதிர்காலத்தில் நாங்கள் இலவச கப்பலில் வழங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Previous articleபிரபல தொகுப்பாளினி ரம்யா அரைகுறை ஆடையுடன் வெளியிட்ட புகைப்படம்! இளைஞர்கள் மத்தியில் குவிந்து வரும் லைக்குகள்!
Next articleபிரபல ரவுடி பேபி நடிகைக்கு விவாகரத்தான இயக்குனருடன் இரண்டாவது திருமணமா! இணையத்தில் உலா வரும் தகவல்!