கனவுகள் உங்களுக்கு கூற வரும் எச்சரிக்கைகள் என்னென்ன தெரியுமா !

0

கனவுகள் என்பது தூங்கும் நேரத்தில் நம்மை இந்த உலகத்தில் இருந்து வேறொரு உலகத்திற்க்கு அழைத்து செல்லும் அற்புதமான ஒன்றாகும். கனவுகள் பிடிக்காதவர்களோ, அதை விரும்பாதவர்களோ இருக்க முடியாது. ஏனெனில் கனவுகள் பெரும்பாலும் நமது ஆழ்மனது ஆசைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. விஞ்ஞானத்தின் படி கனவுகள் என்பது படங்களாகவோ, உணர்ச்சிகளாகவோ அல்லது யோசனைகளாகவோ இருக்கும்.

கனவுகளை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். உங்கள் வாழ்க்கைக்கும் உங்கள் கனவுகளுக்கும் நிச்சயம் எதாவது ஒரு தொடர்பு இருக்கும். கனவுகள் நமது கடந்த காலம், எதிர்காலம் போன்றவற்றை மட்டும் குறிப்பதில்லை. ஏனெனில் சிலசமயம் உங்கள் கனவுகள் உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கைகளாக கூட இருக்கலாம். இந்த பதிவில் கனவுகள் உங்களுக்கு அளிக்கும் எச்சரிக்கைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

விழித்திருக்கும் நேரத்தில் நாம் நம்முடைய ஆரோக்கியத்தை பற்றி அதிக அக்கறை கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் தூங்கும் போது நமது மூளை ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் விழிப்புடன் இருக்கும். கனவுகள் எப்பொழுதும் நமது ஆன்மீக வாழ்வு, மனநலன் மற்றும் உடல்நலம் பற்றிய சிக்னல்களை அனுப்பும். ஒருவேளை நீங்கள் கார் ஓட்டுவது போல கனவு கண்டால் அது உங்கள் ஆரோக்கியம் பற்றிய கனவு ஆகும். அப்பை கனவு வரும்போது காரில் இருப்பது யார், எங்கு செல்கிறோம் போன்றவற்றை கவனிக்க வேண்டும், ஏனெனில் காரில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட போவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

சில நேரங்களில் நாம் கனவில் நம்மை மனித உருவத்தில் பார்க்க முடியாது. மனித உருவமின்றி விலங்காகவோ, பறவையகவோ நம்மை பார்ப்போம். விலங்குகள் நமது ஆழ்மனது ஆசைகளையும், தேவைகளையும் பிரதிபலிக்கும். ஒருவேளை நீங்கள் அடிக்கடி மிருகங்களை கனவில் கண்டால் உங்கள் மூளை உங்கள் பழக்கவழக்கம் பற்றி ஏதோ கூற வருகின்றது என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் மிருகத்தால் துரத்தப்படுவது போல கனவு கண்டால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

கனவுகள் நம் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் படங்கள் மற்றும் உணர்ச்சிகளைத்தான் வெளிப்படுத்தும். நாம் விழித்திருக்கும் போது நமது சின்ன சின்ன ஆசைகளுக்கு நாம் எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, ஆனால் தூங்கும்போது நம் மனதில் ஒளிந்திருக்கும் சிறிய ஆசைகள் நமது கனவுகளை கட்டுப்படுத்த தொடங்குகிறது. இதன்மூலம் நாம் வாழ்க்கையில் எதனை மிகவும் மிஸ் பண்ணுகிறோம் என்பதை உணர்த்தும்.

மரணம் பற்றிய கனவு என்பது நம்முடைய நீண்ட ஆயுளுக்கான அறிகுறி என்று கூறப்படுகிறது. சொல்லப்போனால் அது உண்மையல்ல. மரணம் பற்றிய கனவு என்பது ஒரு சுழற்சி முடிவுக்கு வருகிறது என்பதை உணர்த்துவதாகும். அது உங்கள பழக்கத்தின் முடிவாக இருக்கலாம், அல்லது உறவின் முடிவாக கூட இருக்கலாம். ஒருவேளை யார் இறக்கிறார்கள் என்பதை உங்களால் நினைவுக்கு கொண்டு வர முடிந்தால் அந்த கனவிற்கான அர்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

சில நேரங்களில் கனவுகள் நம்மை எதிர்காலத்திற்கு அழைத்து செல்லக்கூடும், மேலும் எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்பதையும் கனவுகள் உணர்த்தக்கூடும். சில சமயங்களில் கனவுகள் நமக்கு ஏற்கனவே பார்த்தது போன்ற நினைவுகளை உணர்த்தும். இதற்கு தேஜா வூ என்று பெயர். ஒரு சில சூழ்நிலைகள் அல்லது சம்பவங்கள் தொடர்ச்சியாக நீங்கள் ஒரு முறை கனவு கண்டதைப் போலவே மறுபடியும் மறுபடியும் செய்யப்படுகிறீர்கள் என்று உணர்கையில் ஒரு தேஜா வூ கணம்.

கலைஞர்களுக்கு நன்றாக தெரியும், அவர்களின் கனவுகள்தான் அவர்களுக்கான கற்பனையை அதிகரிக்கும். தூங்கி கொண்டிருக்கும் போது உங்கள் மூளை படங்களை உருவாக்கும், அதனை தொடர்ந்து அது கற்பனையாக உங்கள் கனவில் தோன்றும். இது உங்கள் ஆழ்மனத்திற்குள் சென்று அதனை உருவகப்படுத்தும். உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கும் சிறந்த கருவி கனவுதான்.

கனவு காணும் போது நாம் பெரும்பாலும் அதில் வருபவர்கள் யார், எங்கு இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம், யார் மரணிக்கிறார்கள் என்பதைத்தான் கவனிப்போம். ஆனால் நாம் என்ன அணிந்திருக்கிறோம், என்ன வண்ண உடை அணிந்திருக்கிறோம், என்ன கலர் காரில் போகிறோம் என்பதையெல்லாம் கவனிக்க தவறிவிடுவோம். நம் கனவில் வரும் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது விழித்திருக்கும் போது உலகத்தில் இருக்கும் நமது விருப்பங்களை உணர்த்துவதாக இருக்கும். கனவில் பிரகாசமான உடை அணிந்து இருந்தால் அது நமது குழந்தைத்தனத்தை உணர்த்தும். நிர்வாணமாக ஒருவர் இருப்பதை கனவில் கண்டால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதன் அர்த்தமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் வாழ்க்கை நரகமாக காரணம் நீங்கள் சாதாரணமென நினைத்து செய்யும் இந்த செயல்கள்தான்!
Next articleநீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா?