கனடாவில் துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி, நடந்தது என்ன?

கனடா நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் உள்ள போர்டபிக் என்னும் நகர் ஒன்றில், போலீஸ் உடையணிந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் போலீஸ் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலானது சனிக்கிழமை தொடங்கி ஏறத்தாழ 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்திருக்கிறது. துப்பாக்கிதாரி போலீஸ் கார் ஒன்றினை ஓட்டிவந்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்த துப்பாக்கிதாரி பல இடங்களில் மக்களை நோக்கி சுட்டார். துப்பாக்கிதாரியிடமிருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு ஹெய்டி தன் உயிரை இழந்ததாக கனடா நாட்டு போலீஸின் நோவா ஸ்காட்டியா பிராந்திய உதவி ஆணையர் லீ பெர்ஜெர்மன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் கனடா நாட்டு காவல் துறையில் 23 ஆண்டுகள் பணி செய்த பெண் காவலர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் இது மிகவும் கவலைமிக்க தருணம் எனக் கூறியுள்ளார்.
ByTamilpiththan