கனடாவில் ஆபத்தை ஏற்படுத்த முயன்ற இலங்கை தமிழ் இளைஞன் கைது!

0

கனடாவின் ரொரன்ரோ பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மக்கள் செறிந்து காணப்படும் பகுதியில் கறுப்பு நிற Mercedes பென்ஸ் காரை உத்தரவை மீறி ஓட்டி சென்றுள்ளார்.

GTA பகுதியில்அதிக கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ள பகுதியில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

குறித்த பகுதியில் வணக்கஸ்தலங்கள், வங்கிகள், உட்பட பல முக்கிய இடங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த தமிழ் இளைஞன் McLevin Avenue பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதி வீதி விதிமுறைகளை மீறியமை மற்றும் பொலிஸாரின் கட்டளை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் நெடுஞ்சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் செலுத்தி சென்ற பென்ஸ் கார் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதிகாலையில் பொலிஸாருக்கும் மர்மநபருக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம்! தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுக்கொலை!
Next articleஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!