கண்ணி வெடிகளை கண்டுபிடித்து அழிக்கும் குட்டி விமானம்!
கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்கும் குட்டி விமானத்தை இந்தியாவை சேர்ந்த Harshwardhan Zala என்ற மாணவன் உருவாக்கியுள்ளான்.
கண்ணி வெடிகளால் இராணுவ வீரர்கள் உயிரிழப்பதும், கால்களை இழப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
இதற்கு தீ்ர்வு காணும் வகையில் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து அழிக்கும் குட்டி டிரோன் விமானத்தை குஜராத்தை சேர்ந்த Harshwardhan Zala என்ற பத்தாம் வகுப்பு மாணவன் உருவாக்கியுள்ளார்.
இராணுவ வீரர்கள் படும் கஷ்டத்தை படித்து பார்த்த பின்னர் இதனை உருவாக்கியதாக கூறும் Harshwardhan Zala-வுடன் குஜராத் அரசாங்கம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது.
நிலத்திற்கு மேலே 2 அடி உயரத்தில் பறக்கும் குட்டி விமானத்தில் உள்ள சென்சார் கண்ணி வெடிகளை கண்டுபிடித்த பின்னர், Detonator அதை செயலழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!