கண்ணில் கருவளையம் தீர்வு என்ன!

0

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. கணனியில் அதிக நேரம் வேலை செய்வதால் வருகிறது என்கிறீர்கள். எனவே வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்வதே தீர்வு எனலாம். கணனியில் வேலை செய்வதால் மட்டுமல்ல எந்தவிதமான அதீத வேலையும் மனஅழுத்தமும் கண்ணின் கருவளையங்கள் ஏற்படுவதைத் தீவிரமாக்கும்.

மாறாக போதிய ஓய்வும் பொதுவான நல்ஆரோக்கியமும் அது ஏற்படுதைக் குறைக்கும் என்பது முக்கிய உண்மையாகும்.

உங்களுக்கு மாத்திரமல்ல பலருக்கும் இந்தப் பிரச்சனை இருப்பதை நாம் காண முடிகிறது. உங்கள் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. இள வயது முதல் முதுமை வரை பலருக்கு இருக்கிறது

உண்மையைச் சொல்லப் போனால் கண்ணருகே தோன்றும் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்பது பற்றிய முற்று முடிவான விஞ்ஞானபூர்வ முடிவுகள் கிடையாது. ஆயினும் இது தோன்றுவதற்கு பல காரணங்கள் இருப்பதை அறிய முடிகிறது.

பரம்பரை அம்சம் ஒரு முக்கிய காரணமாகும். ஒரே கும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இது ஏற்படுவதைக் காண முடிகிறது.

அத்தகையவர்களுக்கு இளவயதிலேயே இது தோன்றக் கூடும். வயது அதிகரிக்க அதிகரிப்பதுண்டு.

ஒவ்வாமைகள் மற்றும் எக்ஸிமா நோய்களின் தொடர்ச்சியாகவும் இது வருவதுண்டு.

கண்களைச் சுற்றி ஏதாவது காரணத்தால் வீக்கம் ஏற்பட்டால் அதைத் தொடரந்து கருமை ஏற்படலாம். கண்டல், சிறுநீரக நோய், ஒவ்வாமை வீக்கம் போன்றவற்றை கூறிப்பிடலாம்.

வயதாகும் போது சருமம் தனது நெகிழ்ச்சிதன்மையை இழந்து சுருங்குவதாலும் கருவளையும் போலத் தோற்றமளிக்கும்.

புருவங்களுக்கு கீழே மூக்கு அருகே இருக்கும் கண்ணீர் பை வயதின் காரணமாக சுருங்கும் போதும் கண்ணருகே கருமை தோன்றுவதுண்டு.

இவ்வாறு கண்ணைச் சுற்றிய கருமை ஏற்படுவற்கு பல காரணங்கள் இருப்பதால் காரணத்தை அறிந்து சிகிச்சை செய்வதே பொருத்தமானது.

குளுக்கோமா (கண் பிரசர்) நோய்க்கு பயன்படுத்தும் சில துளிமருந்துகளும் அவ்வாறு கருமை படர்வதற்கு காரணமாகும். அத்தகைய கண் மருந்துகளை உபயோகிக்க ஆரம்பித்து சுமார் 2-3 மாதங்களுக்கு பின்னரே கருமை படர ஆரம்பிக்கும். ஆனால் அதை உபயோகிப்பதை நிறுத்தினால் ஒரு சில மாதங்களுக்குள் சருமம் இழல்பான நிறத்திற்கு வந்துவிடும்.

கருமை படர்ந்த சருமத்தின் நிறத்தை குறைப்பதற்கு பல வகையான களிம்பு மருந்துகள் உள்ளன. Hydroquinone, Azelaic acid போன்றவை இலங்கையில் கிடைக்கின்றன. இவற்றை பூசும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறை மற்றும் பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவரின் ஆலோசனையுடன் அவரின் கண்காணிப்பின் கீழேயே உபயோகிக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடிக்கடி மறதி குணப்படுத்த முடியுமா! தீர்வு என்ன!
Next articleநாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி! அடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்!