Home Rasi Palan ராசி பலன் கடன் பிரச்சினையிலிருந்து விடுபட தினமும் இந்த விடயத்தைக் கடைப்பிடித்துப் பாருங்கள்!

கடன் பிரச்சினையிலிருந்து விடுபட தினமும் இந்த விடயத்தைக் கடைப்பிடித்துப் பாருங்கள்!

0
1451

கடன் பிரச்சினையிலிருந்து விடுபட கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடவேண்டும்.வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை (திரிதியை-மகாலட்சுமி) அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சினை, பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதை ஒவ்வொரு மாதமும் செய்யவேண்டும்.

நிறைய பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர் தங்களின் உடைகள் வைக்கும் இடம் மற்றும் பணம் வைக்கும் இடங்களில் கருநீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும்.நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.

காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும். கடுகு எண்ணெய் கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும்.கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணெய்யில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.காலை வேளையில் குளித்து முடித்தவுடன் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வரவும்.இது சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகளில் உணவாகும். இவைகள் உண்ண உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவது உங்களுக்கு தெரியும்.

Previous articleஒரே வாரத்தில் முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகள் மற்றும் பருக்களைப் போக்கும் எளிய வழிகள்!
Next articleஉங்க ராசிப்படி உங்கள் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானதா நீங்க நினைக்கிறது எதை தெரியுமா!