கசந்து போன நடிகை ரேவதியின் வாழ்க்கை! இதுவரை பலரும் அறிந்திடாத கண்ணீர் பக்கங்கள்?

0

தற்போது இல்லத்தரசிகளின் மனம் கவர் கதாப்பாத்திரமாக உலா வரும் நடிகை ரேவதியின் வாழ்க்கையில் இருந்து பலர் கற்று கொண்டிருந்தாலும், அவரின் கண்ணீர் பக்கங்கள் பலருக்கு தெரியாத உண்மைதான்.

நடிகை ரேவதி பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, மோகன் உள்ளிட்ட 80 களின் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர்.

இவர் தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர், சினிமாத்துறை சார்ந்தவற்றில் பல்வேறு தேசிய விருதுகள் வரை பெற்று சாதனைகள் படைத்திருந்தாலும். திருமண வாழ்க்கையில் தோல்வியைப் பெற்று விட்டார். இதுதான் அவரின சோகமான வாழ்க்கை பக்கம் என்று கூட கூறலாம்.

1986 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரமேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் இவர்களுடைய திருமண பந்தம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வில்லை என்பது தான் வருத்தம்.

இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2000 ஆம் ஆண்டு விவரத்து கோரி நீதிமன்றம் சென்றனர். இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு விவாகரத்து கொடுக்கப்பட்டது. விவாக ரத்தைத் தொடர்ந்து இருவரும் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்நிலையில் ரேவதி கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு பெண்குழந்தையை தத்து எடுத்தார். அவருக்கு மகி என்று பெயர் சூட்டியுள்ளார்.

ரேவதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தாலும் ஒரு சில வருடங்களாக மீண்டும் தன்னுடைய கணவருடன் நட்பு ரீதியாகப் பழகி வருகிறாராம்.

பலருக்கு ரோல் மாடலாக இருக்கும் ரேவதிக்கு… எல்லாம் கிடைத்தும் மண வாழ்க்கை கசப்பானதாக மாறிவிட்டது.

இதுவே இன்று வரை அவர் கண்ணீருக்கும் காரணமாக இருந்து வருகிறது என அவருடைய நட்பு வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

அது ஒரு புறம் இருந்தாலும் தற்போது பல சீரியல்களில் நடித்து தனது திறமைகளை வெளியுலகிற்கு நிறுபித்த வண்ணமே உள்ளார்.

தற்போது, இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தவராகவும் அவர் காணப்படுகின்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article100 வயதைத் தாண்டிய வயோதிபர்களுக்கு 5000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு!
Next articleகுப்பைவண்டியில் கொண்டுசெல்லப்பட்ட லட்சாதிபதி முதியவரின் சடலம்: அதிர்ச்சி சம்பவம்!