கேரள மாநிலத்தில் பெண் காவலர் மீது சக போலீஸகாரர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆழப்புலாவில் வள்ளிகுன்னம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவர் சவுமியா (34). இவருக்கு 3 பெண்குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார்.
இந்நிலையில் பெண் காவலர் சவுமியா கடந்த சனிக்கிழமை அன்று பணி முடிந்து தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வழியில் காரில் வந்த போக்குவரத்து பொலிஸ்காரர் அஜாஸ் என்பவர், சவுமியாவின் மோட்டார் வாகனத்தை இடித்து கீழே தள்ளினார். பின்னர் சுதாரித்த சவுமியா அவரிடமிருந்து தப்பித்து ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரை துரத்திப்பிடித்த அஜாஸ் , சவுமியாவை கடுமையாகத் தாக்கினார். இதில் காயம் ஏற்பட்டு சவுமியா கீழே விழுந்தார்.
இதையடுத்து சவுமியாவின் மீதுபெட்ரோல் ஊற்றி தீப்பற்றவைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சவுமியா பரிதாபமாக இறந்தார். அஜாஸ் மீதும் தீ பற்றியதால் அஜாஸ் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அஜாஸ் மயக்கம் தெளிந்த பிறகே ஏன் அவர் சவுமியாவை எரித்துக் கொன்றார் என்பதற்காக காரணம் தெரியவரும் என்று கூறப்படுகின்றது.