ஓடும் விமானத்தில் கழிப்பறை என நினைத்து அவசர வழியை திறந்த பெண்! பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

0

மான்செஸ்டரில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்று 8 மணி நேரம் தாமதமாகியது. இதற்கு காரணத்தைக் கேட்டால் சிரிப்பீர்கள். விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர் டாய்லட் கதவு என தவறான நினைத்து விமானத்தின் அவசர கால வழிக் கதவைத் திறந்துவிட்டார். இதனால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

பாகிஸ்தான் சர்வதேச விமானம் பிகே 702 அந்நாட்டுத் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு யூகே-வின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து கிளம்ப இரவு 9.30 மணிக்கு ஆயத்தமானது.

அப்போது எமர்ஜென்ஸி கதவு அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர் கழிப்பறைக் கதவு என நினைத்து எமர்ஜென்ஸி கதவைத் திறந்தார். விமானம் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டு இருந்தது. அப்போது எமர்ஜென்ஸி கதவு திறக்கப்பட்டதால் உடனே பைலட்டுக்கு சிக்னல் செல்ல, அவர் விமானத்தை நிறுத்தினார்.

சிறிது நேர பரபரப்புக்குப் பின்னர் அங்கு இயல்பு நிலை திரும்பியது. இதனையடுத்து ஜூன் 7ம் தேதி இரவு 9.30 மணிக்கு இஸ்லாமாபாத் கிளம்ப இருந்த அந்த விமானம் 8 மணி நேரம் தாமதமாகி ஜூன் 8ம் தேதி காலை 5 மணிக்கு கிளம்பியது.

இதனால் அவசரமாக இஸ்லாமாபாத் செல்லவேண்டிய பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

விமானம் ஓடுதளத்தில் இருக்கும்போதே இது நடந்ததால் பெரியளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் `emergency chute’ என்பது சாதாரண விஷயம் அல்ல இதனால் எப்படியும் சில லட்சங்கள் PIA-க்குச் செலவாகியிருக்கும். இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருக்கும் பாகிஸ்தானின் தேசிய விமான சேவையான PIA ஏற்கெனவே நஷ்டத்தில்தான் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவரலாற்றில் முதன் முறையாக கனடாவில் புதிய சட்டம் நிறைவேற்றம்! அமலுக்கு வந்தது புதிய தடை!
Next articleசிறையில் இருந்து தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலையாகும் சசிகலா!