ஒரே இரவில் பலகோடி சொத்துக்களுக்கு அதிபதியான பிரித்தானிய இளைஞர்!

0

பிரித்தானியாவின் புகழ்பெற்ற பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ஒரே இரவில் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாகியுள்ளார்.

பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வேதியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் Dr Harry Destecroix (31). இவர் 2014-ம் ஆண்டு கல்லூரியை விட்டு வெளியேறியதும் Ziylo என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

பேராசிரியர் Anthony Davis உடன் இணைந்து அரசின் உதவித்தொகை பெற்று வெறும் £2 மில்லியன் பவுண்ட் செலவில் இந்த நிறுவனத்தை துவங்கியிருந்தார்.

அப்பொழுது பரிசோதனை செய்வதற்கு ஒரு ஆய்வகக்கூடம் கூட இல்லாமல் அவஸ்தையடைந்த Harry, பிரிஸ்டல் நகரத்தில் ஒரேயொரு ஆய்வக கூடத்தை அமைத்து சோதனையை மேற்கொண்டார்.

சோதனையின் பலனாக அடுத்த மூன்றே வருடங்களில் செயற்கை குளுக்கோஸ் பிணைப்பு மூலக்கூறு தொழில்நுட்பத்தை உருவாக்கி வெற்றியும் அடைந்தார். நீரிழிவு நோயாளிகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தை தற்போது உலக அளவில் பிரபலமான நீரிழிவு நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கும் Novo Nordisk, நிறுவனம் வாங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்த நேற்று கையெழுத்தானது. வெறும் £2 மில்லியன் பவுண்ட் செலவில் ஆரமிக்கப்பட்ட இந்த நிறுவனம் £600 மில்லியன் பவுண்ட் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே இரவில் பிரித்தானிய பணக்காரர்களில் ஒருவராக Harry-யும் இடம்பிடித்துள்ளார்.

இதுகுறித்து Harry கூறும்பொழுது, உலகளவில் 382 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 4 மில்லியன் மக்கள் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் எனவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மேலும் உலகளவில் மனிதன் இறப்பதற்கு காரணமான நோய் வகையில் 7 வைத்து இடத்தில் உள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கான குளுக்கோஸ் மூலக்கூறுகளை கண்டுபிடிப்பதற்காகவே நான் ஒரு நிறுவனத்தை துவங்கினேன்.

தற்போது அந்த நிறுவனத்தை புகழ்பெற்ற Novo Nordisk நிறுவனம் வாங்கியுள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது. நிச்சயம் அவர்கள் நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற சேவைகளை செய்வார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Previous articleஇந்த விதை மலச்சிக்கலை உடனே போக்கும்: எப்படி சாப்பிடுவது?
Next articleஇதுபோன்ற ஒரு நிலச்சரிவை பார்த்ததுண்டா? கேரளாவின் பேரளிவு!